காஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாபொய்க் கூறி மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாது! ராகுலுக்கு அமித் ஷா அறிவுரை!இரு மாநில வளர்ச்சி குறித்து ஆலோசனை: ஆந்திரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஉச்ச நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை உண்டு: ராகுல் காந்திமின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் பகல் கொள்ளை: உதயநிதி குற்றச்சாட்டுசென்னைக்கு 3 டிஎம்சி நீர் வழங்க ஆந்திர அரசு முடிவு!ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ. 35-க்கு வாங்க வேண்டிய அவசியம் என்ன? அரசுக்கு பிரேமலதா கேள்விபோராட்டக்காரர்களுக்கு ஜந்தர் மந்தர் மூடப்பட்டால் நாடு தழுவிய போராட்டம் வெடிக்கும்: சிஜேபிடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 40 காசுகள் உயர்ந்து ரூ. 95.38 ஆக நிறைவு!பங்குச் சந்தை மீட்சி: சென்செக்ஸ் 1,109 புள்ளிகளுடனும், நிஃப்டி 359 புள்ளிகளுடன் நிறைவு!மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்வதாக எல். முருகன் அறிவிப்பு!

14.10.1976: சீனாவில் மாவோ மனைவி, ஆதரவாளர் பலர் கைது

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

14.10.1976 - Dinamani

Published On :

லண்டன், அக். 13- சீனாவில் மா-சே-துங் மனைவி சியாங் சிங்கை ஆதரிக்கும் ஏராளமான இடதுசாரி எழுத்தாளர்களையும், மாணவர்களையும் சீன ராணுவம் இன்று கைது செய்தது.

இத்தககவலை லண்டனிலிருந்து வெளியாகும் டெய்லி டெலிகிராபி பத்திரிகை இன்று தெரிவித்தது.

பீகிங் நகரில் உள்ள ’சிங்-ஹுவா’ பல்கலைக்கழகத்தை சீன ராணுவம், சூழ்ந்து கொண்டதாகவும் அந்தப் பத்திரிகை கூறியது. அங்கு பல இடதுசாரி எழுத்தாளர்கள் வசிக்கின்றனர்.

பீகிங் நகரில் காலை முதற்கொண்டே துருப்பு நடமாட்டம் காணப்பட்டதாகவும், செங்கொடிகளை ஏந்திய சிப்பாய்கள் பஸ்களிலும், லாரிகளிலும் சென்றததாகவும் அந்தப் பத்திரிகை கூறியது.

பீகிங் நகரில் உள்ள இரு பல்கலைக்கழகங்களின் மாணவர்களுக்கும், சீன ராணுவத்தினருக்கும் இடையே மோதல்கள் நடந்ததாக ஐப்பான் டோக்கியோவுக்குக் கிடைத்த செய்திகள் கூறின.

உள்நாட்டுப் போர் நிலைமை

சீனாவில் இப்போது "உள்நாட்டுப் போர் நிலைமை" நிலவுவதாக ஒரு ஜப்பானிய பத்திரிகையின் சீன நிருபர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் "பதவிப் போரட்டம் மிகவும் மும்முரமாக நடப்பதாக அந்த நிருபர் தமது செய்தியில் கூறி இருக்கிறர். பீகிங், ஷங்காய், ஆகியவை உள்பட எல்லா பெரிய நகரங்களிலும், இடதுசாரி தீவிரவாதிகள் செய்யப்பட்டு வருவதாக மற்றொரு செய்தி கூறியது.

ராணுவத்தினர் யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்றும் அது குறிப்பிட்டது. ...

Summary

14.10.1976: Mao's wife and several supporters arrested in China.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.