
30.9.1976: கருத்தடை அறுவை - ஆட்களை அழைத்து வர ஆசிரியர்களுக்கு இலக்கு நிர்ணயம்
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

30.9.1976 - Dinamani
திருச்சி, செப். 29 - தமிழ்நாட்டில் கல்வி ஸ்தாபனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு ஆசிரியரும் நடப்பு ஆண்டில் குறைந்தபட்சம் இரண்டு பேரையேனும் கருத்தடை அறுவை சிகிச்சைக்காக அழைத்து வர வேண்டும் என்று தமிழ்நாடு அரசாங்கள் உத்தரவிட்டிருக்கிறது.
தேசிய குடும்ப நலத் திட்டத்தில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதில் ஒரு அம்சமாக இது அமையும். இலக்குகளைப் பூர்த்தி செய்தால் சம்பந்தப்பட்ட ஆசிரியரின் பைலில் பாராட்டுக் குறிப்புகள் எழுதப்படும். தகுதிச் சான்றிதழ், தக்க ரொக்கப் பரிசுகள், முன்கூட்டி சம்பள உயர்வு, சிறந்த சாதனைக்காக மாநில அளவு விருதுகள் ஆகியவையும் ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும்.
“கருத்தடை அறுவை சிகிச்சைக்கு அழைப்பவர் அல்லது ஒப்புக் கொள்ளுபவர் ஆகியோர் விஷயத்தில் கட்டாயம் எதுவும் இருக்கக்கூடாது. ஆசிரியர்கள் இந்த முக்கியமான திட்டத்தில் தீவிர அக்கறை கொள்ள வேண்டும். அவர்கள் இலக்குகளை மிஞ்ச முயல வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.
கருத்தடை அறுவை சிகிச்சைக்கு ஆட்களை அழைத்து வரும் விஷயத்தில் ஆசிரியர்களுக்கு திட்டவட்டமான இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டில் இதுநான் முதல்தடவை என்று கருதப்படுகிறது. தமிழ் நாட்டில் தொடக்க, உயர் தொடக்கப் பள்ளிகளில் மட்டும் சுமார் 2.5 வட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ...
தேர்தல் பற்றி பிரிட்டிஷ் பத்திரிகைக்கு இந்திரா பேட்டி
புதுடில்லி, செப். 29 - சர்க்கார் நாட்டில் தேர்தல்களை தவிர்க்க விரும்பவில்லை என்று பிரதமர் இந்திரா காந்தி கூறினார். ஆனால், எப்போதும் என்பதை சர்க்கார் தீர்மானித்து, சரியான இடத்தில் சரியான நேரத்தில் அதை அறிவிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் சொன்னார்.
லண்டன் பத்திரிகையான “டெய்லி டெலிகிராபின்” நிருபருக்கு செப்டம்பர் 25ந் தேதி அளித்த பேட்டியில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
அவசர நிலை பிரகடனம், அரசியல் சட்ட மாறுதல், குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் போன்ற பால விஷயங்கள் பற்றி இப்பேட்டியில் பிரதமர் கருத்து தெரிவித்தார்.
எந்த சூழ்நிலையில் அவசரநிலை பிரகடனம் செய்ய வேண்டியிருந்தது என்பதை விளக்கிய பிரதமர், ஏற்கனவே அவசரநிலையை சர்க்கார் தளர்த்தி வருகிறது என்றார். காவலில் வைக்கப்பட்டவர்களில் பலர் ஏற்கெனவே வெளியே வந்துவிட்டிருக்கிறார்கள் என்றார்.
18 மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட இப்போது தமக்கு பல விஷயங்களைப் பற்றி மிக அதிக நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்றும் பிரதமர் கூறினார். நாடு பூராவுக்கும் இந்த நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக தாம் நினைப்பதாய் அவர் குறிப்பிட்டார்.
அரசியல் சட்ட மாறுதலைப் பற்றிய கேள்விக்குப் பிரதமர் பதிலளிக்கையில் இப்போது சர்க்கார் செய்ய முயல்வதெல்லாம் அரசியல் சட்டம் எந்த உணர்ச்சியில் இயற்றப் பட்டதோ, அதே உணர்ச்சியில் அதை வியாக்கியானம் செய்யப் பார்க்கிறோம். அவ்வளவு தான் என்றார்.
Summary
30.9.1976: Sterilization surgery – Teachers set targets for bringing in people.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




