
14.9.1976: புதிதாக அரசு பணியில் சேருவோர் 2 குழந்தைகளுக்கு மேல் பெறுவதில்லை என உறுதி தரவேண்டும் - த.நா. அரசின் அறிவிப்பு
அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

14.9.1976 - Dinamani
சென்னை, செப். 13 - 'இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற மாட்டோம்" என்று புதிதாக அரசுப் பணியில் சேருபவர்களிடமிருந்து உத்திரவாதம் பெற்றுக் கொள்ளப்படும்.
தமிழ்நாட்டில் மக்கள் தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ் நாடு அரசு அறிவித்துள்ள ஊக்க திட்டங்கள்-சலுகைகளில் இது முக்கியமானதாகும்.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற நிருபர்கள் கூட்டத்தில் சுகாதார இலாகா செயலாளர் மேற்கண்ட தகவலை அறிவித்தார்.
"இரண்டு குழந்தைகளுடன் தங்களுடைய குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதாய் புதிதாக அரசுப் பணியில் சேருபவர்களிடமிருந்து உத்திரவாதம் பெற்றுக் கொள்ளப்படும். ஆனால் இரண்டு குழந்தைகளும் ஆணாகவே அல்லது பெண்ணாகவோ உள்ள ஊழியர்களிடம் உத்திரவாதம் பெறப்பட மாட்டாது. அவர்கள் மற்றுமொரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம். அவர்கள் ஆண்டுதோறும் தலைமை அலுவலகத்திற்கு தம் அறிக்கை தரும்படி எதிர்பார்க்கப்படுகின்றார்." என்று திட்டத்தை விளக்கி கூறினார்.
குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அரசு ஊழியர்கள் விஷயத்தில் முனைப்பாக அமல்படுத்த அரசு அளிக்க உள்ள ஊக்க திட்டங்கள், அந்த சலுகைகளை (திட்டத்தை மீறும் அரசு அலுவலாளர்கள் விஷயத்தில்) வாபஸ் பெறும் உத்திரவு உடனடியாக அமலுக்கு வரும். இந்து சமுதாயத்தைச் சேர்ந்த அலுவலாளர்கள் மட்டுமின்றி முஸ்லிம், கிருஸ்தவ சமூதாயங்களைச் சேர்ந்தவர்களும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். அவர்களுக்கும் இது பொருந்தும் என்று ஒரு கேள்விக்கு பதிலளித்து முராரி சொன்னார். ...
நிதிக் கட்டுப்பாடு நீடிப்பு பற்றி பிரதமர் - பணவீக்கம் மீண்டும் தலைதூக்கும் ஆபத்துளதென எச்சரிக்கை
திருவனந்தபுரம், செப். 13 - மீண்டும் தலையெடுக்க முடியுமா என்று பணவீக்கம் காத்திருக்கிறது எனவே நாம் தொடர்ந்து நிதிக் கட்டுப்பாட்டைக் கையாண்டு வர வேண்டும்" என்று பிரதமர் இந்திரா காந்தி கூறினார்.
திருவனந்தபுரம் - கொல்லம் பிராட்கேஜ் பாதையை அவர் இன்று திருவனந்தபுரத்தில் துவக்கி வைத்துப் பேசினார். இத்திட்டத்தை அவர் கேரள மக்களுக்கான "ஓணம் பரிசு" என்று வருணித்தார்.
மேடைமீது அமைக்கப்பட்டிருந்த ஒரு லிவரை பிரதமர் இழுத்தவுடன், பச்சை சிக்னல் எரிய, சில மீட்டர் தூரத்தில் காத்திருந்த ஒரு ரயில் வண்டியானது, புதிதாக அமைக்கப்பட்ட 63 கிலோமீட்டர் நீள பிராட்கேஜ் பாதையில் கிளம்பியது.
இந்திரா காந்தி இந்த விழாவில் பேசுகையில், கடந்த ஓராண்டில் அடையப்பட்ட நல்ல பொருளாதார பலன்களைக் குறிப்பிட்டார். நாட்டில் பணவீக்கம் ஒடுக்கப்பட்டுள்ளது என்றாலும், அது மீண்டும் தலையெடுக்க முடியுமா என்று பார்க்கிறது என்று பிரதமர் எச்சரித்தார்.
"நாம் தொடர்ந்து கட்டுப்பாட்டைக் நிதிக் கையாண்டு சிக்கனத்தைப் பின்பற்றி, அரசாங்க செலவை எப்படிக் குறைப்பது என்று பார்த்துவர வேண்டும் என்றார் அவர்.
ரிசர்வ் பாங்கின் அறிக்கையை கடந்த பிரதமர் குறிப்பிட்டு, ஆண்டில் பெரிய முன்னேற்றமும் குறிப்பிடத்தக்க வகையில் கணிசமான சாதனைகளும் அடையப்பட்டுள்ளன. என்றார்.
அதற்கு முன்னரோ நாம் மிகவும் கஷ்டமான காலத்தைக் கடக்க வேண்டியிருந்தது என்று கூறிய அவர். “இந்திய மக்களின் பாராட்டத்தக்க பொறுமையும், விவசாயிகள், மற்றும் பிறரின் கடும் உழைப்பும்தான் இருண்ட காலத்திலிருந்து மீண்டு நல்ல பலன்களைக் காண வழி செய்தன' என்றார்.
'எனினும் இதனால் நாம் மிதப்புக் கொண்டுவிடக் கூடாது என்று பிரதமர் சொன்னார். ...
Summary
14.9.1976: New government recruits must give an undertaking not to have more than two children – Tamil Nadu Government announcement.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




