உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

5.9.1976: 3 குழந்தைகளுக்கு மேல் பெறக்கூடாதென மத்திய அரசு ஊழியர் விதிகள் திருத்தம்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

5.9.1976 - Dinamani

Published On :5 செப்டம்பர் 2026, 4:27 am IST

புது டில்லி, செப். 4 - மத்திய அரசு ஊழியர்கள் 3 குழந்தைகளுக்கு மேல் பெறாமல் இருக்க வேண்டும் என்று கூறி மத்திய அரசு ஊழியருக்கான நடத்தை விதிகளை மத்திய அரசு திருத்தியுள்ளது.

இது சம்பந்தமாக அரசு எடுத்த முடிவை உடனடியாக அமல்படுத்த மத்திய அரசு ஊழியருக்கான விதிமுறைகளில் 21-ஏ என்னும் புதிய பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது.

"மத்திய அரசு ஊழியர் சிறிய குடும்பத்தைப் பெற்றிருத்தல்" என்னும் தலைப்பைக்கொண்ட இப்பிரிவில் கூறப்பட்டுள்ளதாவது:- மத்திய அரசாங்க ஊழியர் ஒவ்வொருவரும் தனக்கு 3 குழந்தைகளுக்கு மேல் இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். எனினும் இந்த விதிமுறையானது 1977 செப்டம்பர் 30ந் தேதியன்று 3 குழந்தைகளுக்கு மேல் உள்ள அரசாங்க ஊழியருக்குப் பொருந்தாது.

"தவிரவும், மேற்படி பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள அரசு ஊழியர் ஒவ்வொருவரும் அத் தேதியில் தனக்கு உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்காதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்." இவ்வாறு புதிய பிரிவு கூறுகிறது.

அதிக குழந்தைகளைப் பெறாமலிருக்க வேண்டும் என்ற தேசிய ஜனத் தொகைக் கொள்கைக்கு இணங்க மத்திய அரசு ஊழியர்களின் நடத்தை விதிகள் இவ்வாறு திருத்தப்பட்டுள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் கூறின.

இதே போன்று நடவடிக்கை எடுக்குமாறு அரசுத் துறை நிறுவனங்களுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

வைக்கிங்-2 செவ்வாயில் வெற்றிகரமாக இறங்கியது

பாசதேனா, (கலிபோர்னியா) செப். 4 - அமெரிக்க விண்கலம் வைக்கிங்-2 இன்று வெற்றிகரமாக செவ்வாய் கிரகத்தில் இறங்கியது.

புகைப்படம் காட்டும் தகவல்

செவ்வாயின் வட துருவத்தின் பகுதி அருகே மணல்பாங்கான பகுதியில் வைக்கிங்-2 விண்வெளிக்கலம் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 4-08 மணிக்கு இறங்கியது.

தாய்க்கலத்திலிருந்து இது தனியே பிரிந்து இறங்குகையில் செய்தி தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டதால் அது கீழே இறங்கியது பற்றிய தகவல்களோ, புகைப்படங்களோ கிடைக்காது போயிற்று. "தகவல் தொடர்பு இவ்விதம் சில மணி நேரம் பாதிக்கப்பட்டு, பிறகு சீர்பட்டது. அதன் பிறகு அமெரிக்க விண்வெளிக் கேந்திரத்துக்கு இன்று வைக்கிங்-2 விண்வெளிக் கலத்திலிருந்து முதல் இரு புகைப்படங்கள் கிடைத்தன.

வைக்கிங்-1 விண்வெளிக்கலம் இறங்கிய இடத்தில் காணப்பட்டது போலவே வைக்கிங்-2 விண்வெளிக்கலம் இறங்கியுள்ள இடமும் பாலைவனப் பாங்கானது என்பதை வைக்கிங்-2 அனுப்பிய புகைப்படங்கள் காட்டின.

அமெரிக்கா ஏற்கெனவே செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிய வைக்கிங்-1 விண்வெளிக் கலம் செவ்வாயில் இறங்கி தொடர்ந்து தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது. ...

Summary

5.9.1976: Amendment to Central Government employee rules prohibiting having more than three children.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.