நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசு

நேபாள வெள்ளத்தில் இருந்து 163 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறித்து...

Nepal Floods 163 Indians Rescued! 151 People in China Central Government

நேபாள வெள்ளத்திற்கு பிறகு... - பிடிஐ

Published On :35 வினாடிகள் முன்பு

நேபாள வெள்ளத்தில் இருந்து 163 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு இன்று (செப். 1) அறிவித்தது. 151 பேர் சீனாவில் இருந்து தாயகத்திற்கு புறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டது.

இது தொடர்பாக வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நேற்று முதல் 5 பேர் மீட்கப்பட்ட நிலையில், இதுவரை 163 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சீனாவில் இருந்து 151 பேர் புறப்பட்டுள்ளனர்.

சுரங்க மீட்புப் படை: உண்மையான கதை சிலிமேயில் உள்ள ஒரு நீர்மின் சுரங்கப்பாதைக்குள் அரங்கேறி வருகிறது.

இந்திய மீட்புக் குழுவினர் நெரிசலான, கடினமான நிலப்பரப்பு மற்றும் சதுப்பு நில சுரங்கப்பாதைத் தளம் ஆகியவற்றை எதிர்கொண்டு வருகின்றனர். அதில் சிறப்பு உபகரணங்களைப் பயன்படுத்த முடியவில்லை.

எனவே, அவர்கள் மிதவைகளைத் தற்காலிகமாகப் பயன்படுத்தி, இருள் சூழ்ந்த சுரங்கத்திற்குள் மேலும் ஆழமாகச் சென்றனர்.

மீட்புப் படையினர் மீண்டும் நாளை உள்ளே செல்லவுள்ளனர். சுரங்கத்திற்குள் சிக்கியிருப்பவர்கள் யாரும் கைவிடப்படவில்லை.

குடும்பங்களுக்கு விரைவாகப் பதில்கள் அளிக்கும் வகையில், இந்திய தடயவியல் குழு நேபாளத்துடன் இணைந்து டிஎன்ஏ பரிசோதனைப் பணிகளையும் விரைவுபடுத்துகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Nepal Floods 163 Indians Rescued! 151 People in China Central Government

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.