FOLLOW US

ON GOOGLE DISCOVER

ஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

நேபாள வெள்ளத்தை சமாளித்து மாஸ் காட்டிய பச்சை வீடு! காப்பாற்றிய எக்ஸ் வடிவ அடித்தளம்!

நேபாள வெள்ளத்தை சமாளித்து பச்சை வீடு நிற்க எக்ஸ் வடிவ அடித்தளமே காரணம் எனக் கூறப்படுவது பற்றி..

"Everything is gone": One house stands firm amid Nepal flash flood as survivors recount terrifying escape

பச்சை நிற வீடு - ANI

Published On :1 செப்டம்பர் 2026, 6:25 pm IST

நேபாளத்தையே புரட்டிப்போட்ட பெரு வெள்ளத்தில் ஏராளமான உயிர்கள் பலியாகியிருக்கின்றன. மலைப் பகுதிகளில் தடையற்ற பல கட்டுமானங்களும் இந்த உயிர்ப்பலிகளுக்குக் காரணமாகியிருக்கின்றன.

ஒரு நாட்டின் பெரும்பகுதியே வெள்ளத்தால் புரட்டிப்போடப்பட்டிருக்கும் நிலையில்கூட, ஒரே ஒரு பச்சை நிற வீடு மட்டும் ஆடவில்லை, அசையவில்லை.

போடேகோஷி ஆற்றின் கரையோரத்தில் அமைந்திருக்கும் பச்சை நிற வீடு, தனித்துவமான கட்டுமான தொழில்நுட்ப உதவியால், பெரு வெள்ளத்தை சமாளித்து எதற்கும் அசையாமல் நிற்கிறது. இதற்குக் காரணம் என்ன என்று ஆராயப்பட்டபோது, வழக்கமாக, பள்ளம் தோண்டி கடைக்கால் போடுவார்கள்.

அதுவும் ஒரு சுற்றுச்சுவர் போல செங்கல், சிமெண்ட் கொண்டு போடப்படும். ஆனால், இங்கே, ஆற்றங்கரையோரம் என்பதை கருத்தில் கொண்டு, நான்கு மூலைகளிலும் சிமெண்ட் கற்களைக் கொண்டு அடித்தளம் போட்டு, சுற்றுச் சுவருக்கு பதிலாக சிமெண்ட் துண்களைக் கொண்டு எக்ஸ் போன்ற வடிவமைப்பால் அடித்தளம் போடப்பட்டுள்ளது.

தரைப்பகுதி முழுவதும் அடித்துச் செல்லப்பட்டபோது, இந்த எக்ஸ் அமைப்புதான் வெள்ளம் மற்றும் அடித்தள மண்ணைக் கடந்து செல்ல அனுமதித்துவிட்டுதான் இருந்த இடத்தைவிட்டு நகராமல் இருந்தது. பக்கத்தில் இருந்த வீடுகள் அடையாளமே இல்லாமல் அடித்துச் செல்லப்பட்டுவிட்டும், இன்னும் வீடு பயன்படுத்தும் நிலையிலேயே இருக்கிறது. அதன் கடைக்கால் பகுதிதான் இத்தனைக்கும் காரணம் என்று ஒட்டுமொத்த கட்டுமான நிறுவனங்களும் ஆச்சரியத்தோடு பார்த்து வருகின்றன.

ஒவ்வொரு நிலப்பரப்புக்கும் ஏற்ப கட்டடங்களின் கட்டுமானப் பணிகள் மாறுபடும். அதனை கருத்தில் கொண்டு கட்டுமானப் பணி நடந்துள்ளதால் மட்டுமே இந்த பச்சை நிற வீடு இன்று உலகம் முழுவதும் தனிக்கவனம் பெற்று கம்பீரமாக நிற்கிறது.

ஆகஸ்ட் 26ஆம் தேதி நேபாளத்தையே புரட்டிப்போட்ட வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது, காணாமல் போன 3900ம் பேரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆற்றங்கரையோரம் அமைந்திருந்த குடியிருப்புகளை கட்டுக்கடங்காத ஆற்று வெள்ளம் அடித்துச் சென்ற போது, பச்சை நிற வீடு மட்டும் அனைத்துக்கும் சாட்சியாக மாறியது.

வெள்ளம் வந்தபோது, இந்த வீட்டுக்குள் இருந்த குடும்பத்தினர் சிக்கித் தவித்தனர். முதலில் விடியோவை பார்த்த எவரும், அவர்களும் வெள்ளத்தில்அடித்துச் செல்லப்பட்டுவிடுவார்களே என்றுதான் பயந்திருப்பர். ஆனால், அந்த வீடு சற்றும் அசைவில்லாமல் அனைத்தையும் தாங்கிக் கொண்டு இருந்தபடியே இருந்தது. வீட்டில் இருந்தவர்களும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாகவே தகவல்கள் வெளியாகி வருகின்றன.

வீட்டின் இரண்டாவது தளம் வரை ஆற்றின் வெள்ளம் அடித்தபோதும், அந்த பச்சை வீட்டுக்கு எதுவும் நேரவில்லை. இதனைப் பார்த்தவர்கள் அப்படி என்னதான், எப்படித்தான் வீட்டைக் கட்டியிருப்பார்கள் என்று பேசத் தொடங்கிவிட்டார்கள். இன்றோ, அந்தக் கட்டுமானம் பற்றிய ரகசியம் வெளியாகியிருக்கிறது.

தற்போது வெளியாகும் புகைப்படங்களைப் பார்ப்பவர்கள், அடடா, சுற்றிலும் கட்டடங்கள் எல்லாம் சகதியாக மாறியிருக்கும்போது, ஒரே ஒரு வீடு மட்டும் தனித்து நின்று, இங்கு பெருவெள்ளம் நேரிடுவதற்கு முன்பு, குடியிருப்புகள் இருந்தன என்பதற்கு தான் ஒரே ஒரு சாட்சி என்பது போல நின்று கொண்டிருக்கிறது.

Summary

The Green House made a massive statement by withstanding the Nepal floods—saved by its X-shaped foundation!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.