மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

12.9.1976: த.நா.வுக்கு கூடுதல் நீர் வழங்க கர்நாடகத்திடம் பிரதமர் கூறலாம்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

12.9.1976 - Dinamani

Published On :

சென்னை, செப். 11 - காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் நெற்பயிரைப் பாதுகாப்பதற்காக கர்நாடக மாநிலத்திலிருந்து இன்னும் கூடுதலாக தண்ணீர் விடும்படி இம்மாதம் 15ம்தேதி பெங்களூர் செல்லும் பிரதம மந்திரி கர்நாடக மாநில அரசிடம் வற்புறுத்தக் கூடும் என்று இன்று சென்னையில் மத்திய நிதி அமைச்சர் சி. சுப்ரமணியம் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் வறட்சி நிலை, காவிரி பாசனப் பகுதிகளில் நெல் உற்பத்தி பாதிக்கப்படாமலிருக்கத் தேவைப்படும் நீர் ஆகியவை குறித்து தமிழகம் வரும் பிரதமரிடம் கவர்னரும், அவரது ஆலோசகர்கள், தலைமைச் செயலாளர் ஆகிய அதிகாரிகள் நிலைமைகளை எடுத்துச் சொல்வார்கள். கர்நாடக அரசிடம் பேசி மத்திய சர்க்கார் தலையிட்டு தண்ணீர் பெற்றுத் தரும்படி பிரதமரிடம் கோருவார்கள். கர்நாடக மாநிலத்தில் உள்ள கிருஷ்ண ராஜ சாகர் நீர்த்தேக்கம் நிரம்பி வழிவதை தமிழக அரசின் உயர் அதிகாரி ஒருவர் சுட்டிக் காட்டி நமது நிலை, தேவையை பிரதமரிடம் விளக்கி, இடைக்கால உதவியாக பயிரைக் காப்பாற்ற கர்நாடக அரசு தண்ணீர் கொடுத்துதவ இயன்றதைச் செய்யும்படி கோருவோம் என்றார். ...

கடத்தப்பட்ட விமானத்தின் பயணிகள் தில்லி திரும்பினர்

புது டில்லி, செப். 11- நேற்று லாகூருக்குக் கடத்திச் செல்லப்பட்ட இந்திய ஏர்லைன்ஸ் போயிங் விமானத்திலிருந்த, எஞ்சிய பயணிகளும், விமான சிப்பந்திகளும் மீட்கப்பட்டு விட்டனர்.

விமானத்தைக் கடத்திய ஆயுதபாணிகளான 6 பேரும் கைது செய்யப்பட்டனர்.

64 பயணிகளும் பயிற்சியாளர் உட்பட சிப்பந்திகளும், டில்லியிலிருந்து சென்றிருந்த ஒரு உதவி விமானத்தில் இன்று பகல் 12-20 மணிக்கு டில்லி வந்து சேர்ந்தனர்.

இப்போது லாகூர் விமான நிலையத்தில் இருக்கும் விமானம் திரும்பிச் செல்ல பாகிஸ்தான் அனுமதி வழங்கிவிட்டது. விமானம் நாளை இங்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஞ்சினீயரிங் கண்ணோட்டத்திலும், பந்தோபஸ்து கண்ணோட்டத்திலும் இந்த விமானத்தை சோதித்த பிறகு இது லாகூரிலிருந்து கொண்டு வரப்படும் என்று சிவில் விமானப் போக்குவரத்து மந்திரிராஜ் பகதூர் கூறினார்.

விமானத்தை சோதிப்பதற்காக லாகூரிலிருந்து தொழில்நுட்ப ஊழியர் கோஷ்டியொன்று லாகூர் சென்றிருக்கிறது. ...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.