தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் 2 புயல் சின்னங்கள் உருவாக வாய்ப்பு சிஜேபி-இன் தேசியக் கொடி போராட்டம்: தில்லியில் பாதுகாப்பு அதிகரிப்பு தீவிரமாகப் பரவும் இன்ஃப்ளூயன்ஸா: முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிட்ட சுகாதாரத் துறைகோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா்மணிப்பூரில் 84 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு திடீர் உடல் நலக் குறைவு! காரணம் என்ன?கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ. 30-க்கு விற்பனை: தமிழக அரசுதிமுக எம்.பி.க்கள் கூட்டம் அறிவிப்பு! ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகருடன் முதல்வர் விஜய் சந்திப்பு!முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

28.8.1976: காவிரி: டில்லி பேச்சில் உடன்பாடு

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

28.8.1976 - Dinamani

Updated On :

புதுடில்லி, ஆக. 27- பற்றாக்குறை உள்ள ஆண்டுகளில் காவேரி ஜலத்தை பகிர்ந்து கொள்ளும் முறையை வகுக்க ஒரு விசேஷ கமிட்டி அமைக்கப்படும். காவேரி பள்ளத்தாக்கு அதிகாரக் குழு நியமிக்கப்படும். இது இன்று பார்லிமெண்டில் அறிவிக்கப்பட்டது.

மத்ய அரசு மற்றும் தமிழ் நாடு, கர்நாடக, கேரள மாநில அரசுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அந்தக் கமிட்டியில் இருப்பார்கள். இப்பொழுது உபயோகத்துக்கு உள்ள உபரி ஜல அளவையும் அது கணக்கிடும். அதன் அறிக்கை 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும். மூன்று மாநில முதன் மந்திரிகள் கூட்டத்தில் அறிக்கை பரிசீலிக்கப்படும். கமிட்டி உடனடியாக அமைக்கப்படும்.

காவேரி பள்ளத்தாக்கு அதிகாரக் குழுவில் மூன்று மாநிலங்கள் ஒவ்வொன்றின் பாசன எஞ்சினீயர்களும் இருப்பார்கள். மத்ய அரசு நியமிக்கும் பாசன எஞ்சினீயர் அதற்குத் தலைமை வகிப்பார். மூன்று மாநில செயலாளர்கள் குழு கொண்ட கமிட்டியால் அதிகார குழுவின் பணிகள், நடைமுறை விதிகள் வகுக்கப்படும். இவற்றையும் முதன்மந்திரிகளின் அடுத்த கூட்டம் பரிசீலிக்கும்.

இன்று லோகசபையில் விவசாய பாசன மந்திரி ஜகஜீவன்ராம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழ் நாடு கவர்னர், கர்நாடக முதன் மந்திரி, கேரள மந்திரிகள் இருவர் ஆகியோருடன் இரு நாட்களில் நடத்திய பேச்சின் பலன் பற்றி சபைக்கு அவர் தெரிவித்தார். காவிரி ஜல உபயோகம் உதவி பற்றி அந்தப் பேச்சு நடத்தப்பட் டது. ராஜ்ய சபையில் பாசன மந்திரி கே.என்.சிங் இது போல ஓர் அறிக்கை விடுத்தார்.

மிக சிக்கலான பிரச்னைகளைத் தீர்க்கும் திரும்புமுனை என கருதக் கூடிய உடன்பாட்டின் முக்ய அம்சங்கள் இவை என்று ஜகஜீன் ராம் கூறினார். ...

பரீட்சை முறையை அகற்ற சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் யோசனை

சென்னை, ஆக. 27 - "பரீட்சைகள் பிரதானமாக ஆதிக்கம் வகிக்கும் முறை தற்போது பல்கலைக் கழகத்தில் உள்ளது. இந்த முறையை மாற்றி உண்மையான கல்விக்கு பிரதான இடமளிக்கும் முறையை ஏற்படுத்தும் நீண்ட கால முயற்சியில் சென்னை பல்கலைக் கழகம் ஈடுபட்டிருக்கிறது" என்று சென்னை பல்கலை கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் மால்கம் எஸ். ஆதிசேஷைய்யா இன்று கூறினார்.

கல்லூரி விஞ்ஞான அபிவிருத்தி திட்டத்தில் பல்கலைக்கழக தலைமைத் திட்டத்தின் கீழ் "கேள்வி பாங்குகள்" பற்றிய ஒரு பணியகத்தை பெளதிக ரசாயனத் துறை ஏற்பாடு செய்துள்ளது. கல்லூரிகளில் ரசாயனத் துறையிலிருந்து மூன்று ஆசிரியர்கள் இந்தப் பணியகத் சென்னை நகரக்தில் கலந்து கொள்கிறார்கள். இது மூன்று தினங்கள் நடக்கும். அழகப்ப செட்டியார் தொழில் நுட்ப கல்லூரியில் இப்பணியகத்தை துணை வேந்தர் இன்று தொடங்கி வைத்து பேசினார். ...

Summary

28.8.1976: Cauvery: Agreement reached in Delhi talks.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.