மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

26.8.1976: காவிரி பற்றி டில்லியில் பேச்சு - இன்று பார்லிமெண்டில் அறிக்கை வரும்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

26.8.1976 - Dinamani

Published On :

புதுடில்லி, ஆக, 25 - கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களிடையே காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வது சம்பந்தமாக, இன்று டில்லியில் நடந்த பேச்சுவார்த்தைகள் குறித்து நாளை பார்லிமெண்டில் மத்திய விவசாய பாசன அமைச்சர் ஜக ஜீவன்ராம் ஒரு அறிக்கையை வெளியிடவிருக்கிறார்.

இன்று மாலை வெகுநேரம் வரை பேச்சுக்கள் நடந்தன. ஜகஜீவன் ராம் தலைமையில் நடந்த இந்தப் பேச்சு வார்த்தைகளில் தமிழ்நாடு கவர்னர் மோகன்லால் சுகாதியா, கர்நாடக முதலமைச்சர் தேவராஜ் அர்ஸ், கேரள மின்சார அமைச்சர் எம்.என். கோவிந்தன் நாயர், பாசன அமைச்சர் கே.ஜி. அடியோடி ஆகியோரும் அவர்களுடைய தூது கோஷ்டிகளும் கலந்து கொண்டனர்.

பிரமாண வாக்குமூலங்களில் சில பகுதிகளை அகற்ற சர்க்காரியா கமிஷன் உத்தரவு

புதுடில்லி. ஆக, 25 - மகஜர்தாரர்கள் தாக்கல் செய்திருந்த பல்வேறு புகார்கள் சம்பந்தமாக முன்னாள் முதல்வர் எம். கருணாநிதி, மற்றும் சிலர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் எழுப்பிய ஆட்சேபங்கள் மீது இன்று சர்க்காரியா கமிஷன் உத்தரவு பிறப்பித்தது

நீதிபதி சர்க்காரியா பிரமாண வாக்குமூலங்களில் சில பல பகுதிகளை அகற்றுமாறு உத்தரவிட்டார். மிச்சப் பகுதிகளை இறுதி வாதம்கள் கட்டம் வரை அப்படியே வைத்திருக்க உத்தரவிட்டார்.

இரு புகார்கள் சம்பந்தமாக உத்தரவை ஒத்திவைத்தார். மற்றவைகளைப் பற்றிய ஆட்சேபங்களை நிராகரித்தார்.

தன் உத்தரவில் அப்படியே விட்டு வைக்கப்பட்டுள்ள புகார்கள் சம்பந்தமாகவும், மிச்சம் விட்டு வைத்திருப்பவை சம்பந்தமாகவும் பிரமாண வாக்குமூலங்களை செப்டம்பர் 10ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யுமாறு எதிர் மனுதாரர்களுக்கு உத்தரவிட்டார்.

கமிஷன் விசாரணை செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது. ...

Summary

: Talks on Cauvery in Delhi – Statement to be made in Parliament today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.