ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

21.8.1976: த.நா.வில் ராஷ்டிரபதி ஆட்சியை நீடிக்க தீர்மானம்

அரை நூற்றாண்டுக்கு முன், தினமணி நாளிதழில் இன்றைய நாளில் வெளியான முக்கிய செய்தி.

half century ago

21.8.1976 - Dinamani

Published On :33 வினாடிகள் முன்பு

புதுடில்லி, ஆக. 20 - தமிழ்நாட்டில் ராஷ்டிரபதி ஆட்சியை மேலும் 6 மாத காலம் நீடிப்பதற்கு அங்கீகாரம் கோரும் தீர்மானத்தை இன்று லோக் சபையில் உள்துறை அமைச்சர் கே. பிரம்மானந்த ரெட்டி பிரேரித்தார். ராஷ்டிரபதி ஆட்சியை 1976 செப்டம்பர் 10ந் தேதியிலிருந்து 6 மாத நீடிப்பதற்கான தீர்மானம் ஏற்கனவே ராஜ்யசபையில் நிறைவேறிவிட்டது.

தீர்மானத்தைப் பிரேரித்துப் பேசிய அமைச்சர், ராஷ்டிரபதி ஆட்சியின் இப்போதைய 6 மாத காலம் முடிவதற்குள்ளாக தேர்தல்களை நடத்துவது சாத்தியமல்ல என்றார். இரண்டாவது ஆண்டாக பருவ மழை தவறியதால், பல பகுதிகளில் பற்றாக்குறை நிலைமைகள் நிலவுவதாகக் கூறினார்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பெருமளவில் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அவசரப் நிவாரணம் வழங்கும் பணியில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. நிர்வாகத்தைத் தூய்மைப்படுத்தி, அபிவிருத்தியைத் துரிதப்படுத்தவும் இப்போது நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளன. எனவே, இந்தக் கட்டத்தில் தேர்தல்களை நடத்துவது சாத்தியமாயிராது என்று அமைச்சர் கூறினர்.

ராஷ்டிரபதி ஆட்சி அமல் நடத்தப்பட்ட பிறகு சட்டம், ஒழுங்கு நிலைமை குறிப்பிடத்தக்க அளவு அபிவிருத்தி அடைந்திருப்பதாகவும், தடை செய்யப்பட்டுடுள்ள ஸ்தாபனங்களைச் சேர்ந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும், ரகசிய நடவடிக்கைகள் தடுக்கப்பட்டிருப்பதாகவும், தொழிலாளர் உறவில் குறிப்பிடத்தக்க அபிவிருத்தி ஏற்பட்டிருப்பதாகவும் சொன்னார். ...

அண்டை மாநிலங்கள் ஒத்துழைப்புடன் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு

கோவில்பட்டி, ஆக . 20 - தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்னைக்கு அண்டை ராஜ்யங்களின் ஒத்துழைப்புடன் தீர்வு காண முடியும் என்று நம்புவதாக கவர்னர் சுகாதியா திருச்செந்தூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு வரவேற்பில் பேசுகையில் தெரிவித்தார்.

போதிய அரிசி சப்ளை கிடைக்கவும், அரிசி விலை உயராமல் தடுக்கவும் வகை செய்வதாகவும் கவர்னர் உறுதியளித்தார். தமிழ்நாட்டில் போதிய அரிசி கையிருப்பு உள்ளது என்றார்.

பதனீர் இறக்குவோர் 200 பேருக்கு கனரா பாங்கு அளிக்கும் உதவியான தலா ரூ. 200 தொகையை கவர்னர் விநியோகித்தார். கறவை மாடுகள் வாங்குவதற்காக 14 பேருக்கு மொத்தம் ரூ. 21,000 யும் அவர் விநியோகித்தார். ...

Summary

21.8.1976: Resolution to extend President's Rule in Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.