ஆலங்குடியில் மாற்றுத்திறன் தொண்டு நிறுவனம் மற்றும் அஞ்சலி கதிரவன் பிசியோதெரபி மருத்துவ மையம் இணைந்து நடத்திய இலவச உடல் இயக்க மருத்துவ முகாம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக தொழில்நுட்ப வல்லுநர் ஜி.;வசந்தராம்குமார் தலைமை தாங்கி மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு தமிழக அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகளைப் பற்றி சிறப்புரை ஆற்றினார்.
புதுக்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவர் கே.இளையராஜா,ஆசிரியர் எஸ்.ஸ்டீபன், ஆரோக்கியசாமி ஆகியோர் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு நடை பயிற்சி கருவிகள். தசைப்பயிற்சி கருவிகள், பக்கவாத நோயாளிகளுக்கு தசைத்தளர்வு பயிற்சி கருவிகளும் வழங்கினார்கள். மருத்துவ முகாமில் கலந்து கொண்ட குழந்தைகள், முதியோர்களுக்கு உடல் இயக்க மருத்துவர் கே. கோவிந்தசாமியும், மனம் நலம் குறித்த ஆலோசனைகளை ஹோமியோபதி மருத்துவர் வி.ஜெகதாவும் வழங்கினார்கள். இறுதியாக ஓய்வுபெற்ற நல்லாசிரியர் ஆதிமூலம் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 3

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 4

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 2

ஆகஸ்ட் மாத எண்கணித பலன்கள் - 1
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government


