ஹைபர்டென்ஷன் என்றால் என்ன?

இன்றைய பரபரப்பான உலகில் அதிகம் அறியப்படும் வியாதிகளில் முதல் இடத்தில் இருப்பது ஹைபர்டென்ஷன். ஒருவர் காச் மூச் என்று கத்திவிட்டுப் போனால், அவரைப் பற்றிக் கூறும் போது அவருக்கு ஹைபர்டென்ஷன் இருக்கிறது என
Published on
Updated on
1 min read

இன்றைய பரபரப்பான உலகில் அதிகம் அறியப்படும் வியாதிகளில் முதல் இடத்தில் இருப்பது ஹைபர்டென்ஷன். ஒருவர் காச் மூச் என்று கத்திவிட்டுப் போனால், அவரைப் பற்றிக் கூறும் போது அவருக்கு ஹைபர்டென்ஷன் இருக்கிறது என்று சொல்வார்கள்.

அந்த ஹைபர்டென்ஷன் என்றால் என்ன? அதிக ரத்த அழுத்த நோயையே ஹைபர்டென்ஷன் என்று அழைக்கிறார்கள்.

ஒருவரது உடலில் நரம்புப் பகுதியில் பயணிக்கும் ரத்தம் எந்த வேகத்தில் பயணிக்கிறது என்பதைப் பொறுத்தே ரத்த அழுத்தம் அளவிடப்படுகிறது. இதயம் சுத்தப்படுத்திய ரத்தத்தை தமணி வழியாக வெளியேற்றும் போது அழுத்தம் அதிகமாக இருக்கும். இதனால் ரத்த நாளங்களில் ரத்த ஓட்டம் மிக வேகமாக இருக்கும். இதனால் நமது உடல் கட்டுப்பாட்டை இழந்து அதிக டென்ஷன் அடைகிறது.

இந்த அதிக ரத்த அழுத்த நோயை சைலன்ட் கில்லர் நோய் என்கிறார்கள். ஏன் என்றால், தங்களது ரத்த அழுத்தம் உயர்வதை பலரும் அறிந்திருப்பதில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மனிதர்கள் ஹைபர்டென்ஷனால் உயிரிழக்கின்றனர். ஹைபர்டென்ஷனால் மாரடைப்போ அல்லது பக்கவாதமோ ஏற்பட்ட பிறகுதான் ஒருவருக்கு ஹைபர்டென்ஷன் இருக்கிறது என்ற விவரமே தெரிய வருகிறது.

சிலர் முன்கூட்டிய தெரியும் சில அறிகுறிகளை வைத்து ரத்த அழுத்தப் பரிசோதனை மேற்கொண்டு அதற்கான மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com