வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

சீரற்ற பற்களுக்கு "கிளிப்' வயது தடையில்லை

சீரரற்ற பல் வரிசையுடையோருக்குப் பற்களைச் சுத்தம் செய்வதற்கும் உணவுப் பொருளை கடித்து மெல்லுவதற்கும் சிரமமாக இருக்கும். மேலும் இவை முக அழகைக் கொடுப்பதால் தன்னம்பிக்கையை குறைக்கும்.

News image
Updated On :2 ஜூலை 2013, 7:18 am

அருண்

சீரரற்ற பல் வரிசையுடையோருக்குப் பற்களைச் சுத்தம் செய்வதற்கும் உணவுப் பொருளை கடித்து மெல்லுவதற்கும் சிரமமாக இருக்கும். மேலும் இவை முக அழகைக் கெடுப்பதால் தன்னம்பிக்கையை குறைக்கும்.

எனவே, இப்போதுள்ள நவீன பல் சிகிச்சையின் கிளிப்புகள் மூலம் எந்த வயதினரும் இந்தக் குறையைச் சரி செய்து கொள்ளலாம். இப்படி சரிசெய்து கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

1. பல்லிடுக்குகளில் அதிக அளவில் உணவுத் துணுக்குகள் தங்கிவிடுவதால் அவற்றை முழுமையாய் சுத்தம் செய்வது இயலாததாகிறது. இவ்விதம் தங்கும் உணவுத் துணுக்குகள் பற்களை ஒட்டியுள்ள ஈறுகளை பாதிப்படையச் செய்கிறது. நாளடைவில் பற்கள் ஆட்டம் காணத் தொடங்கும்.

2. முன்வரிசை பற்கள் சீரற்று இருப்பதால் இவர்கள் பெரும்பாலும் உணவைச் சாப்பிட பின்வரிசைப் பற்களையே பயன்படுத்துகின்றனர். அதனால் அவை விரைவில் தேய ஆரம்பிக்கும்.

3. எந்த வயதிலும் அழகாய் தோற்றம் அளிப்பது தவறல்ல. முக அழகிற்கு பல் வரிசை மிக முக்கியமானதாகும். அழகிய பல் வரிசை அமையப் பெறாதோருக்கு கிளிப்புகள் பெரும் வரப்பிரசாதமாகும்.

சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சிகிச்சை முறை ஒன்றே. ஆயினும் பெரியவர்களின் எலும்பு முதிர்ச்சியின் காரணமாக சிறிது கூடுதல் காலம் பிடிக்கும். மேலும் பெரியவர்களுக்கே உரிய எலும்பு இழப்பு, ஈறுகளில் தொல்லை, பல் இழப்பு போன்றவற்றையும் தக்க சிகிச்சையினால் சரி செய்து கொள்ளலாம். எனவே, காலம் கடந்து விடவில்லை. தக்க பல் சிகிச்சையைத் தேர்ந்தெடுத்து கிளிப்பைப் பொருத்தி தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.