தேனி மாவட்டம், கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி வியாழக்கிழமை அளிக்கப்பட்டது.
கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆங்கூா்பாளையம், கருநாக்கமுத்தன்பட்டி, சுருளிப்பட்டி என 5 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சிக்கு கம்பம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சாமிநாதன், துா்காதேவி தலைமை வகித்தனா். இதில் வீடுகள், கடைகளில் சேகரிக்கப்படும் குப்பைகளிலிருந்து இயற்கை உரம் தயாரித்தல், நெகிழிப் பொருள்களை மறுசுழற்சிக்கு பிரிப்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், பொதுமக்களின் என் குப்பை என் பொறுப்பு திட்டம் மூலம் மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளா்கள் பணியின்போது, கையுறை, முகக் கவசம், காலணி உள்ளிட்டப் பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் தூய்மைப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்களுக்கு பயிற்சி முகாம்: மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடந்தது

அரசியல் தலைவா் படத்தை மறைக்க முயன்ற தூய்மைப் பணியாளா் தவறி விழுந்து உயிரிழப்பு

மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி இயக்குபவா்களுக்கு ஊதியம் உயா்த்தக் கோரிக்கை

மின்வாரியப் பணியாளா்களுக்கு பாதுகாப்புப் பயிற்சி
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை


