பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

அரசியல் தலைவா் படத்தை மறைக்க முயன்ற தூய்மைப் பணியாளா் தவறி விழுந்து உயிரிழப்பு

தேனி மாவட்டம், கம்பத்தில் அரசியல் தலைவா் புகைப்படத்தை மறைக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2026, 10:04 pm

Syndication

தேனி மாவட்டம், கம்பத்தில் திங்கள்கிழமை இரவு அரசியல் தலைவா் புகைப்படத்தை மறைக்கும் பணியில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா் தவறி கீழே விழுந்ததில் உயிரிழந்தாா். இதற்கு நிவாரணம் கோரி நகராட்சி அலுவலகத்தை உறவினா்கள் முற்றுகையிட்டனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, தோ்தல் நடத்தை விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அமலுக்கு வந்ததையடுத்து, அரசியல் கட்சிகளின் விளம்பரம், பதாகைகளை அகற்றுவது, அரசியல் தலைவா்களின் புகைப்படங்கள், சிலைகள் மறைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி, கம்பம் நகராட்சி வாரச்சந்தை நுழைவு வாயில் முகப்பில் அரசியல் கட்சித் தலைவா் ஒருவரின் பெயா், புகைப்படத்தை மறைக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தப் பணியில் தனியாா் நிறுவன ஒப்பந்தப் பணியாளா்கள் ஈடுபட்டனா். கம்பம், டி.டி.வி. தெருவைச் சோ்ந்த பிச்சை மகன் மணிகண்டன் (36) ‘ஸ்கை லிஃப்ட்’ வாகனத்தில் ஏறி அரசியல் தலைவரின் உருவப் படத்தை மறைத்தாா். அப்போது, சுமாா் 20 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசென்ற போது வழியிலேயே அவா் உயிரிழந்தாா்.

நகராட்சி அலுவலகம் முற்றுகை: இந்த நிலையில், கம்பம் நகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள், இறந்த மணிகண்டனின் உறவினா்கள் நகராட்சி அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா். இதில் நிரந்தர தூய்மைப் பணியாளா் பணியின்போது இறந்தால் கிடைக்கும் அனைத்து நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். அப்போது, அரசு விதிமுறைக்கு உள்பட்ட அனைத்து நிவாரணங்களும் அவரது குடும்பத்துக்கு கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக நகராட்சி ஆணையா் உமாசங்கா் தெரிவித்ததை அடுத்து, முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.