கொசு கடித்து அரிக்கிறதா? அந்த இடத்தில் உப்பை தண்ணீரில் கரைத்து தடவினால் அரிப்பு நீங்கும்.
- பி. கவிதா
எலுமிச்சம் பழச்சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்த கலவை கொண்டு வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம் அகலும்.
- லட்சுமி மணிவண்ணன்
ஆமணக்கு இலையை விளக்கெண்ணெய்யில் வதக்கி கட்டிகளின் மீது வைத்து துணியால் கட்டினால் கட்டிகள் பழுத்து உடையும்.
பாதத்தில் பித்த வெடிப்பு வராமல் தடுக்க அரச மரத்தின் பால் எடுத்துத் தடவி வர பித்தம் மாயமாகிவிடும்.
வாழைப்பூவை நன்கு மையாக அரைத்து அப்படியே உதடு வெடிப்பு, ஆசனவாய் வெடிப்பு வெளிப்புறமாக தடவி வர குணமாகும்.
- கே.பிரபாவதி
பூக்குவளையில் தண்ணீர் ஊற்றி ஒரு சிட்டிகை உப்பையும் போட்டுவிட்டால் பூக்கள் நீண்ட நேரம் புதிதாக வாடாமல் இருக்கும்.
கண்ணாடிப் பொருள்களைச் சோப்புப் போட்டுக் கழுவிவிட்டு நீலம் கலந்த நீரில் அலசினால் மிகவும் பளபளவென்று இருக்கும்.
வீட்டில் தயாரிக்கும் தேநீரில் சில துளிகள் வெனிலா எஸன்ஸை சேர்த்துக் கொண்டால் தேநீர் மணமாகவும், சுவையாகவும் இருக்கும்.
- நெ.இராமன்
வயது அதிகரிக்கும்போது ஞாபகசக்தி குறையும். இதற்கு பார்லி அரிசியும், அவித்த உருளைக் கிழங்கும் சாப்பிட்டால் போதும். இவற்றில் உள்ள மாவுச் சத்து ஞாபக சக்தியை வளர்க்கும் என்று 2001- ஆம் ஆண்டு டொரன்டோ பல்கலைக்கழகம் கண்டு பிடித்தது. எனவே, வாரம் மூன்று வேளையாவது தவறாமல் இதனை சேர்த்துக் கொள்ளுங்கள்.
(இளமை காக்கும் உணவு முறைகள் என்னும் நூலிலிருந்து)
- முக்கிமலை நஞ்சன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு!

ஏப். 19-ல் சென்னை வருகிறார் அமித் ஷா!

பட்ஜெட் விலையில் ரெட்மியின் புதிய ஸ்மார்ட்போன்! ஏ7 ப்ரோ அறிமுகம்!

மகளிர் இடஒதுக்கீடு: தேர்தல் நேரத்தில் அவையைக் கூட்டுவது அவசியமா? - திமுக
வீடியோக்கள்
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை


