
வயிறு உப்புசம், வாயுத் தொல்லை, அஜீரணக்கோளாறு நீங்க தினமும் வேப்பம் பூ ரசம் அருந்தி வரலாம்.
இஞ்சிச்சாறு, இஞ்சி ரசம் என உணவில் இஞ்சியை அதிகம் சேர்த்துக் கொள்ள அஜீரணக் கோளாறுகள் ஏற்படாது.
தினமும் அருகம்புல் சாறு அருந்தி வர மலச்சிக்கல் சரியாகும். இளம் சூடான பாலில் 1 தேக்கரண்டி தேன் கலந்து தினமும் குழந்தைகளுக்கு கொடுத்து வர நினைவாற்றல் கூடும்.
காலை உணவுக்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட வேண்டும். இது உடலில் இருக்கும் கேடு விளைவிக்கக்கூடிய விஷயங்களை வெளியேற்றும்.
விரலி மஞ்சள் பொடி 1 தேக்கரண்டி, 1 கைப்பிடி வேப்பிலையை, 1 சொட்டு யூகலிப்டஸ் தைலம், 1 லிட்டர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து அதில் ஆவி பிடித்தால் ஜலதோஷம் குணமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.