எண் சாண் உடலுக்கு சிரசே பிரதானம். இந்நிலையில் தலைக்கு மேல் வேலையிருக்கும் போது தலைவலி வேறு வந்துவிட்டால் என்ன செய்வது? காரணம் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். சில சமயம் தலைக்கு குளித்த பின் தலையில் நீர் கோர்த்துக் கொண்டிருக்கலாம். அப்படியாக இருந்தால் அதனை சரி செய்து கொள்ள இயற்கை வழியில் ஒரு தீர்வு உள்ளது. என்னவென்று பார்க்கலாமா?
பிரச்னை - தலைவலி
அறிகுறிகள்
தலைக்கு குளித்தால் உண்டாகும் தலை வலி

தீர்வு
- ஒரு கத்தரிக்காயை (வரியுள்ள நாட்டு காய்) எடுத்துக் கொள்ளவும்.
- அதனை 15 நிமிடம் வெதுவெதுப்பான நீரில் ஊறப் போடவும்.
- பின்பு எடுத்து நறுக்கி, மிக்ஸியில் போட்டு அதனுடன் தக்காளி (1), மிளகு(4), கொஞ்சம் மஞ்சள் தூள், சேர்த்து அனைத்தையும் நன்றாக அரைக்கவும்.
- பின்பு வடிகட்டி காலை மற்றும் மாலை என இரு வேளையும் குடித்து வரவும்.
- தேவைப்படுமெனில் உப்பு சேர்த்துக் கொள்ளவும்

இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு: பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள்
வைட்டமின் B2 , C , B6 , தையமின் , நியசின் , மெக்னீசியம் , பாஸ்பரஸ் , காப்பர் , பொட்டாசியம் , மங்கனீசு , கால்சியம் , இரும்புச் சத்து , போலிக் ஆசிட் , நார்ச் சத்து
கத்தரிக்காயின் சிறப்புகள்
மண்டலம் - சிறுநீரக மண்டலம்
பஞ்சபூதம் - நிலம்
மாதம் - வைகாசி
குணம் - சகிப்புத்தன்மை
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
அலைபேசி - 96557 58609
மின்னஞ்சல் - Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


