கீரை : கரிசலாங்கண்ணிக் கீரைத் துவையல்
தேவையான பொருட்கள் : கரிசலாங்கண்ணிக் கீரை ஒரு கட்டு (200 கிராம்), மிளகு - 1 ஸ்பூன் எலுமிச்சை (பழச்சாறு தோலோடு) - 2, நெய் - 2 ஸ்பூன், உப்பு - தேவையான அளவு
செய்முறை : முதலில் கீரையைச் சுத்தம் செய்து உலர வைத்து, வாணலியில் போட்டு அதனுடன் நெய் விட்டு நன்றாக வதக்கவும்.
மிளகை லேசாக வறுத்து அத்துடன் உப்பு, எலுமிச்சைச் பழச்சாறு கலந்து கீரையுடன் சேர்த்து நன்கு அரைத்து துவையலாக்கி தினமும் சாப்பாட்டில் நிறைய எடுத்து கொண்டால் ரத்தசோகை குணமாகும். முடியும் நீளமாக வளரும் அருமையான துவையல்.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









