கறிவேப்பிலை புழுங்கலரிசிக் கஞ்சி
தேவையான பொருட்கள்
புழுங்கலரிசி நொய் - 100 கிராம்
கறிவேப்பிலை - இரண்டு கைப்பிடி
உப்பு - தேவையான அளவு
மோர் - தேவையான அளவு
செய்முறை
- முதலில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து அதில் கறிவேப்பிலையை போட்டு மூடவும்.
- சில நிமிடங்கள் கழித்து மூடியைத் திறந்தால் கறிவேப்பிலையின் சாறு முழுவதும் இறங்கி தண்ணீர் பச்சை நிறமாக இருக்கும். அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
- வடிகட்டிய நீரை பாத்திரத்தில் ஊற்றி அதில் புழுங்கலரிசி நொய்யைச் சேர்த்து வேக வைக்கவும். அது நன்கு வெந்து கஞ்சி பதம் வந்தவுடன் இறக்கி வைக்கவும்.
- பின்பு கஞ்சியில் சிறிதளவு உப்பு மற்றும் மோர் சேர்த்து பருகலாம்.
- அல்லது எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் கஞ்சியை அருந்தலாம்.
பயன்கள்
இந்தக் கஞ்சியை அதிகப்படியான கொழுப்பு உள்ளவர்கள் தினமும் ஒருவேளை மருந்தாக இந்தக் கஞ்சியை குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு கரைந்து உடல் ஆரோக்கியம் மேம்பட உதவும்.
தினமும் இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வரமிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விஜய்தான் தமிழ்நாட்டை ஆள்வார்; இலங்கை, நேபாளம் போல கருத்துக்கணிப்புகள் பொய்யாகும்! - செங்கோட்டையன்

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


