தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்

இந்தியாவில் 100க்கும் அதிகமானோர் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஹரியாணா, ஒடிசா, கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 
தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? பரவும் விதம் மற்றும் அறிகுறிகள்

இந்தியாவில் 100க்கும் அதிகமானோர் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் ஹரியாணா, ஒடிசா, கேரளம் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 

இந்தியாவில் கரோனா, குரங்கு அம்மை போன்ற நோய்களின் வரிசையில் இந்த தக்காளி காய்ச்சல் புதிதாக இணைந்துள்ளது. கடந்த மே மாதம் 6ஆம் தேதி முதன் முதலாக கேரளத்தில் இந்த தக்காளி காய்ச்சல் கண்டறியப்பட்டது.

தக்காளி காய்ச்சல் மற்றும் அந்த நோய் குறித்து முழுமையான விவரங்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
 

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? 
தக்காளி காய்ச்சல் முதன் முதலாக கேரளத்தின் கொல்லம் மாவட்டத்தில் கண்டறியப்பட்டது. தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் கரோனா வைரஸின்   அறிகுறிகள் போன்று தென்பட்டன. இருப்பினும் தக்காளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் சார்ஸ் குடும்பத்தைச் சார்ந்தது அல்ல. தக்காளி காய்ச்சல் காக்சாக்கி A16 என்ற வைரஸின் மூலம் ஏற்படுகிறது. இது எண்டரோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. இதனை வைரஸ் காய்ச்சல் எனக் கூறுவதைக் காட்டிலும், டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவிற்கு பிறகு ஏற்படும் பாதிப்புகளே எனக் கூறலாம். 

தக்காளி காய்ச்சல் எனப் பெயர் வரக் காரணம் என்ன?

இந்தக் காய்ச்சல் தக்காளியுடன் தொடர்புடையது என தவறானக் கருத்து உள்ளது. ஆனால், இந்தக் காய்ச்சாலினால் பாதிக்கப்படுபவர்களின் உடலில் ஏற்படும் சிறிய சிகப்புக் கொப்புளங்கள் நாளடைவில் பெரிதாக தக்காளி போன்று மாறுவதே தக்காளிக் காய்ச்சல் எனப் பெயர் வரக் காரணம் ஆகும்.

பரவுவதற்கான காரணம் என்ன?
இதுவரை தக்காளி காய்ச்சல் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து சரியாகத் தெரியவில்லை. மருத்துவ வல்லுநர்கள் இந்த நோய் எவ்வாறு பரவுகிறது என்பது குறித்து ஆராய்ந்து வருகிறார்கள்.

தக்காளி காய்ச்சலுக்கும் கரோனாவிற்கும் உள்ள வேறுபாடுகள் என்ன?
தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் 5-7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். ஆனால், கரோனாவினால் பாதிக்கப்பட்டால் தனிமைப்படுத்துதல் காலம் 2-14 நாட்கள் ஆகும்.
கரோனா வைரஸ் வேகமாக தொற்றிக் கொள்ளும் தன்மையுடையது. ஆனால், தக்காளி காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸின் தொற்றிக் கொள்ளும் வேகம் குறைவு.
டெங்கு மற்றும் சிக்குன்குன்யாவிற்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களை குணப்படுத்தப் பயன்படுத்தப்படுகிறது. கரோனாவினால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆக்ஸிஜன் வழங்குவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.
தக்காளி காய்ச்சலால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழல் தற்போது வரை உருவாகவில்லை. ஆனால், கரோனாவினால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

தக்காளி காய்ச்சலுக்கான அறிகுறிகள் என்ன?
தோல் எரிச்சல் ஏற்படுவது இந்த நோயின் முக்கிய அறிகுறியாகும். கை மற்றும் கால்கள் வெளிரிய நிறமாக மாறுதல், உடல் சோர்வு ஏற்படுதல், வாந்தி வருவது போன்ற உணர்வு, இருமல், காய்ச்சல், எலும்பு மூட்டுகளில் வலி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

தக்காளி காய்ச்சல் வராமல் காத்துக் கொள்வது எப்படி?
அதிக அளவில் தண்ணீர் மற்றும் நீராகாரங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். காய்ச்சிய நீரையேப் பருக வேண்டும். உடலில் ஏதேனும் கொப்புளங்கள் ஏற்பட்டால் அதனை தொடாமல் இருக்க வேண்டும். சுகாதாரமான பழக்க வழக்கங்களை கடைப்பிடித்தல். நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருத்தல். போதுமான அளவிற்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

நோய்த் தொற்றை கண்டறிவது எப்படி?
மேற்கூறிய அறிகுறிகள் ஒருவருக்கு தென்படும் பட்சத்தில் அவர்கள் ஸிகா, டெங்கு மற்றும் சிக்குன்குன்யா போன்றவைகளுக்கான பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

குணப்படுத்துவது எப்படி?
சிக்குன்குன்யா மற்றும் டெங்குவை குணப்படுத்த பயன்படுத்தப்படும் முறைகளே தக்காளி காய்ச்சலுக்கும் பின்பற்றப்படுகிறது. தனிமைப்படுத்திக் கொள்ளுதல், அதிக அளவில் நீர் சத்துகளை எடுத்துக் கொள்ளுதல், ஓய்வு எடுத்துக் கொள்வது போன்ற ஆலோசனைகள் மருத்துவர்களின் தரப்பில் இருந்து அறிவுறுத்தப்படுகிறது.

காய்ச்சல் இருப்பின் பாரசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்கள்?
தக்காளி காய்ச்சலால் இதுவரை தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அண்டை மாநிலங்களும் நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.

இந்திய அரசினால் கூறப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?
மக்கள் சுகாதாரமான பழக்க வழக்கங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
தக்காளி காய்ச்சலின் அறிகுறிகள் குறித்து குழந்தைகள் தெரிந்திருக்க வேண்டும்.
குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள், உடைகள், உணவு போன்றவைகளை இந்த சூழலில் மற்றவர்களுடன் பகிரக் கூடாது.
நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தை 5-7 நாட்கள் தனிமைப்படுத்தப் பட வேண்டும்.
குழந்தைகள் மட்டுமின்றி இந்த தக்காளி காய்ச்சல் பெரியவர்களுக்கும் பரவக் கூடியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com