
அழுத்திக் கொல்லும் வாழ்க்கையின் அவலங்களும், சமுதாயச் சூழல் மற்றும் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் ஏமாற்றங்களும் தாக்குதல்களும் இளைத்த மனங்களை பாதிக்காமல் விடாது. மனதின் இயல்பு நிலைகளில் தொய்வும், தளர்ச்சியும் உண்டாகும்.
மனத்தளர்ச்சியை, விரக்தியை தன்னம்பிக்கை கொண்டவர்களால் எதிர்த்து முறியடித்து இயற்கையான மனநிலைக்கு மீள முடியும். ஆயினும் பெரும்பாலானவர்களை மனச்சோர்வு நோய் ஆட்டி அலைக்கழித்து விடுகிறது. ஒரு சிலரோ தற்கொலை செய்து கொள்ளுமளவுக்கு உந்தித் தள்ளப் படுகின்றனர்.
பிரபல திரை நட்சத்திரங்களாய் மின்னிய ஷோபா, விஜயஸ்ரீ, லட்சுமிஸ்ரீ, படாபட் ஜெயலட்சுமி, சில்க் ஸ்மிதா, விஜி, பிரதீக்ஷா, மோனல், ஜீவி போன்றோர் முதல் சராசரி மனிதர்கள் வரை அன்றாடம் தற்கொலை நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. பாதுகாப்பற்ற தன்மையின் (Insecured feeling) எல்லைக்கே வந்து நிற்கும் போதுதான் தற்கொலை தவிர வேறுவழியில்லை என்ற மனநிலை உருவாகிறது. சராசரியாக 20 முதல் 30 சதவீதம் பேர்கள் வரை இந்த மனமுடக்கத்திற்கு ஆளாகிறார்கள். இம்மனநிலை சற்று நீடித்து நிலைக்குமானால் உறுதியாகத் தற்கொலை செய்து கொள்கின்றனர். இத்தகைய உணர்வும் எண்ணமும் தோன்றும் போது முறையான கவுன்சிலிங் மற்றும் ஹோமியோபதி மருந்துகள் மூலம் தற்கொலை முடிவிலிருந்து வெளியேற முடியும்.
அவமானம், நீடித்த மன உளைச்சல், ஏமாற்றம், விரத்தி போன்ற மனோ காரணங்களால் பாதிக்கபட்டு தற்கொலைக்கான தூண்டுதல் ஏற்படுகிறது. மன அழுத்தம், ஆழ்மன வருத்தம் போன்ற பாதிப்பதை நீக்க ‘இக்னேஷியா’ என்ற மருந்தும், கடுமையானவேதனையால் விரக்தியால் ஏற்படும் தற்கொலை உணர்வை மாற்ற ‘ஆரம்மெட்’ என்ற மருந்தும் பயன்படுகின்றன.
வாழநினைத்தால் வாழலாம்! வழியா இல்லை பூமியில்?
Depression என்ற சொல்லுக்கு சரியான பொருள் பள்ளம் Mind De Pression என்பது உள்ளத்தில் ஏற்பட்ட பள்ளம். மனவியலில் ‘மனத்தளர்ச்சி நோய்’ என்று விவரிக்கப்படுகிறது. 1.மனம் சார்ந்த சோர்வு 2.நரம்பியல் சார்ந்த சோர்வு என்று இருவகையாக இந்நோய் காணப்படுகிறது. மனம் சார்ந்த சோர்வு மனதிலேயே தோன்றுகிறது. நரம்பியல் சார்ந்த சோர்வு கடுமையான மன உளைச்சலின் விளைவாக தோன்றக்கூடியது. Depression காரணமாக தூக்கம் தூரப் போகக் கூடும், பசி பறி போகக் கூடும். தலைவலியும் உடல் அசதியும் துயரப்படுத்தக் கூடும். “தரை மீது காணும்யாவும் தண்ணீரில் போடும் கோலம்! வாழ்வே மாயம்!” என்று வாழ்க்கை மீதான விரக்தியும் வெறுப்பும் மேலோங்கக் கூடும். “சாவது ஒன்று தான் தீர்வு” என்று முடிவெடுக்கக் கூடும்.
இத்தகைய பாதிப்புகளை உண்டாக்கக் கூடிய மனசோர்வு நோயை முழுமையாகக் குணப்படுத்தக் கூடிய மருந்துகள் ஹோமியோபதியில் உள்ளன. பாதிக்கப்பட்டவரிடம் காணப்படும் அறிகுறிகளை ஆய்வு செய்து உரிய மருந்து கண்டறிந்து பயன்படுத்தினால் மனசோர்விலிருந்து உறுதியாக மீள முடியும்.
மருந்துகள் குறிகள்
Dr.S.வெங்கடாசலம்
மாற்றுமருத்துவ நிபுணர், சாத்தூர்
Cell : 9443145700 / Mail : alltemed@g,mail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.