22. வலியே வராதே...

பணிச்சுமை நிறைந்த சூழலில் வெற்றியை நோக்கி பயணிக்கும் நாம் அனைவரும்
22. வலியே வராதே...
Published on
Updated on
2 min read

பணிச்சுமை நிறைந்த சூழலில் வெற்றியை நோக்கி பயணிக்கும் நாம் அனைவரும் காலத்தின் கட்டாயத்தால் ஏதோ ஒரு நோய்க்கு ஆளாவது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களிலிருந்து நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள ஆங்கில மருத்துவத்தை நாடிப்போகும்படி நம் வாழ்க்கை முறையை மாற்றிக் கொண்டு விட்டோம்.

தொடர்ந்து நம் மனித குலத்தை அச்சுறுத்தும் நோய்கள் மனிதன் வாழும் சூழ்நிலைகளை பாதித்தாலும் ஒவ்வொரு மருத்துவ துறைகளும் அதனதன் தனிப்பட்ட முறைகளில் சிறப்பானது. அதுபோல் பிசியோதெரபி மருத்துவ முறை தனிப்பட்ட வழிமுறைகளை கொண்டு உடலில் ஏற்படும் பல்வேறு பாதிப்புகளை சரி செய்தும், கட்டுப்படுத்தவும் கண்டறியப்பட்ட ஒன்றாகும். ஆங்கில மருத்துவத்தின் சிறப்பு பிரிவாக செயலாற்றி வளர்ந்து அதன் வெற்றி பாதையில் பயணித்து வருகிறது.

ஆங்கில மருத்துவத்தின் அனைத்து துறையிலும் பிசியோதெரபி மருத்துவத்தின் தேவை இருப்பினும்

  • மூட்டு வலி (Joint Pain),
  • தசை வலி (muscular pain),
  • முதுகு வலி (Back pain),
  • முழங்கால் வலி (knee pain),
  • குதிகால் வலி (heel pain),
  • தோள்பட்டை வலி (shoulder pain),
  • தசை பிடிப்பு (spasm/cramp),
  • கழுத்துவலி (neck pain)
  • மூட்டுத் தேய்மானம்(Arthritis)
  • முதுகு தட்டு விலகல் (Disc prolapse)

போன்ற பிரச்னைகளை மாத்திரையின் தேவையில்லாமல் எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் தனிப்பட்ட பல்வேறு ஆராய்ச்சிகளின் மூலம் நிரூப்பிக்கப்பட்ட முறைகளை கொண்ட மருத்துவ முறைகளை கொண்டு குணப்படுத்திட கண்டறியப்பட்டதே பிசியோதெரபி மருத்துவமாகும். இது  ஆங்கில மருத்துவத்தின் ஒரு சிறப்பு பிரிவேயாகும்.

வளர்ந்து வரும் தொழில்நுட்ப துறையின் வளர்ச்சியோடு தன்னையும் இணைத்து கொண்டு பிசியோதெரபி மருத்துவம் மென்மேலும் வளர்ந்து வருகிறது. வலியை போக்க மாத்திரைகள் பல்வேறு கண்டறியப்பட்டாலும் பல்வேறு பக்கவிளைவுகளை உடலில் விதைத்து விட்டே செல்லும், அனைவருக்கும் தெரிந்த பக்க விளைவு வயிற்று எரிச்சல் மற்றும் புண்  (gastritis). பிசியோதெரபி மருத்துவ முறை இது போன்ற எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் பாதிக்கபட்டவர்களை குணப்படுத்தி தகுந்த வலி நிவாரணியாக சமீபகாலங்களில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளபட்டு  வருகிறது. இதில் முறையாக படித்து தகுதி பெற்ற மருத்துவர்களை கொண்டு சிகிச்சை பெரும் பொழுது இதன் மகத்துவத்தை இன்னும் செவ்வனே உணரலாம். வலி நிவாரணத்தோடு நின்று விடாமல்

  • மூளை ரத்த அழுத்தம் பாதிப்பால் ஏற்படும் பக்கவாதம், (stroke)
  • மூளை வளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள், (cerebral palsy)
  • விளையாட்டின் போது ஏற்படும் காயங்கள், (sports injuries)
  • எலும்பு முறிவுக்கு பின் மூட்டு இறுகிபோதல் (stiffness)

போன்ற பல்வேறு பிரச்னைகளை உடற்பயிற்சி (THERAPEUTIC EXERCISES) மூலமும், சில இதற்கெனவே வடிவமைக்கப்பட்ட சிறப்பான உபகரணங்களை (IFT, US, IRR, WAX THERAPY) கொண்டு அளிக்கும் பிசியோதெரபி மருத்துவத்தின் மூலம் சரிபடுத்தி கொள்ளவும், பாதிக்கபட்டவர்களுக்கு ஏற்படும் நூறு சதவிகித உடல் ஊனத்தை குறைத்து வெற்றிகரமாக யாருடைய உதவியும் இல்லாமல் வாழ வழிச் செய்திடவும் முடியும். (INDEPENDANT LIFE).

வலி நிவாரணிகளால் வரும் சிறுநீரக செயலிழப்பு நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே செல்வதை மக்களுக்கு புரிய வைக்கவே இந்தப் பகுதி.

தி. செந்தில்குமார்

கல்லூரி விரிவுரையாளர்

சாய் பிசியோ கேர் & க்யூர், ஆக்ஸ்போர்டு மருத்துவ கல்லூரி

பெங்களூர் / செல்பேசி எண் - 8147349181

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com