11. உடல் தசைகளில் காயங்கள் ஏற்படுமா?

நாள்பட்ட வலிகளுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துங்கள் பயன் அளிக்காமல்
11. உடல் தசைகளில் காயங்கள் ஏற்படுமா?

நாள்பட்ட வலிகளுக்கு மருத்துவர்கள் கொடுக்கும் மருந்துங்கள் பயன் அளிக்காமல் போனாலும் நீங்கள் அணுகும் பிசியோதெரபி மருத்துவர் கூறும் விளக்கங்கள் மற்றும் பயிற்சிகள் நிச்சயம் நல்ல பலனைத் தரும். முதுகு வலிக்கு என்னிடம் வருவோர், சிகிச்சைக்கு பின்னர் வலி நிவாரணம் அடைந்ததும், நான் அளித்த உடற்பயற்சியை அப்படியே நிறுத்து விடுவார்கள். நாங்கள் கற்றுக் கொடுத்த பயிற்சியை தொடர்ந்து செய்து வருவது பாதிக்கபட்ட தசையோ அல்லது வேறு பகுதிகளையோ இயக்க கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்காகத்தான். அது வலியை மீண்டும் உருவாகாமல் தடுக்க பெரிதும் உதவும்.

வெற்றியின் முதல் படி வலி,  நம் மன வலியைப் போக்க ஆறுதலே  போதுமானது. ஆனால் உடலில் ஏற்படும் வலிகளைப் போக்க  தகுந்த ஆய்வின் மூலம் தருவிக்கப்பட்ட தனிப்பட்ட வடிவம் கொண்ட தசை பயற்சிகள் சிறந்த வலி நிவாரணியாகும் என்பதில் சந்தேகம் வேண்டாம். வலிகள் போக்கும் 1000 மருந்து மாத்திரைகள் சந்தையில் கிடைத்தாலும்,  வலியின் காரணம் அறிந்து ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுக்கும் அவரின் தசைகளில் உள்ள தசையின் சக்தியை  தீர்மானித்து அளிக்கப்படும் பயற்சிகள் மட்டுமே வலிக்கு நிரந்தர தீர்வாக அமையும்.

உடனே உங்களுக்கு வரும் முக்கிய கேள்வி பிசியோதெரபி மருத்துவர்கள் கூறும் பயற்சிகள் தொடர்நது செய்யலாமா? தாராளமாக செய்யலாம். மருந்து மாத்திரைகள் தரும் பக்க விளைவுகளை காட்டிலும் நீங்கள் வலிக்கான பயற்சி செய்தால் குணமடைகிறது என்றால் அதை தாராளமாக தொடர்ந்து செய்வதில் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது. உடற்தசைகள் தொடர்நது ஒரே பணியை செய்து கொண்டே இருக்கும் போது தனது வலுவான  தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க நேரிடும். இதனை ஆங்கிலத்தில் ஸ்ட்ரைன் என்பார்கள்.

தொடர்ந்து இத்தகைய ஸ்ட்ரைன் ஏற்படும் போது,  கை அல்லது கால் அல்லது முதுகு தசைகளில் ஏற்படும் சிறு  சிறு காயங்கள் ஒரு நாள் கடுமையான வலியாக உருவாகலாம். மருத்துவ உலகம் கூறும் புது செய்தி எந்த வலியும் ஒரே நாளில் வருவதில்லை தொடர் காயங்கள் ஒரு நாள் கடுமையான வலியாக உடல் உணரும் என்கிறார்கள். இதனை தடுக்கவே அன்றாடம் செய்யும் சிறு உடற்பயற்சிகள் பெரிதும் நமது உடற் தசைகளின் இறுக்கத்தை குறைப்பதோடு காயங்களை ஏற்படாமல் தடுக்கும்.

சமீபத்தில் 24 வயது மதிக்கதக்க இளைஞர் ஒருவர் கடுமையான மணிக்கட்டு வலியுடன் வந்தார். சோதித்துப் பார்த்த பின் அவர் கடுமையாக பளு தூக்கும் உடற்பயற்சி கூடத்தில், தினமும் செய்யும் பயற்சிகள்தான் காரணம் என தெரிய வந்தது. தவறான பயற்சிகள் எளிதில் தசைகளில் ஸ்ட்ரைன் என்னும் சிறு காயங்களை ஏற்படுத்தி தசைகளில் வலியை உருவாக்குவதோடு தசையால் சார்ந்து இயங்கும் மூட்டுகளிலும் வலிகளை ஏற்படுத்தும்.  ஜிம் செல்ல வேண்டாம் என்று அவரிடம் கூறிய போது அவரால் அதை ஏற்று கொள்ளவே முடியவில்லை. வலியின் காரணத்தை கண்டறிந்த பின் காரணியை சரி செய்யாமல் வெறும் மருந்து மாத்திரைகள் எத்தனை உட்கொண்டாலும் வீண்.

தசைகளின் வலுத்தன்மைக்கு ஏற்ப அளிக்கும் உடற்பயிற்சிகள் மிக முக்கியம். போலவே, தசையின் வளைவுத்தன்மையும் முக்கியம். இரண்டும் சரியான அளவில் இல்லாமல் போனால் நாம் செய்யும் மிக அதிகப்படியான வேலைப்பளு எளிதில் தசைகளை கிழிந்து போக அல்லது வலியை ஏற்படுத்த பலமான வாய்ப்புகள் உள்ளது. அதற்கெனவே தகுதி பெற்ற பிசியோதெரபி மருத்துவர்களை பணியில் அமர்த்தி கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதை இந்திய கிரிக்கெட் அணி செய்து வருகிறது என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். உடல் இயக்கம் மிக முக்கியமானது அதுவும் தசைகளில் ஏற்படும் இறுக்கமும் தளர்ச்சியும் தசையின் இயக்கத்தை கட்டுப்பாட்டில் வைப்பதோடு மூளையோடு இணைந்து பணியாற்ற உதவுகிறது. வேலைப்பளு அதிகமாக இருக்கும் போது நாம் தொடர்ந்து அமர்ந்து கொண்டே பணி செய்த பின் வரும் முதுகு வலியின் காரணம் ஓய்வே தராமல் இயக்கும் தசைகளின் ஏற்படும் ஸ்ட்ரைன்  என்ற தசை காயங்களே காரணமாகும். இதனை அறிந்தால் தசைகளுக்கு ஓய்வு கொடுக்க நாம் தயங்க மாட்டோம்.

T. செந்தில்குமார்,

பிசியோதெரபி மருத்துவர், 
கல்லூரி விரிவுரையாளர்,

ஆக்ஸ்போர்டு பிசியோதெரபி மருத்துவ கல்லூரி,

சாய் பிசியோ கேர் & க்யூர், பெங்களூர்.

8147349181
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com