கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இன்றைய மருத்துவ சிந்தனை (7.12.2017)ஒமம்

ஒமம், கோதுமை, மஞ்சள் - மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து , வீக்கம்

News image
Updated On :7 டிசம்பர் 2016, 6:17 am

தினமணி

ஒமம், கோதுமை, மஞ்சள் - மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து , வீக்கம் உள்ள இடங்களில் பற்றுப் போட்டால் மூன்றே நாள்களில் வீக்கம் கரையும்.

ஒமம், இஞ்சி - இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக அரைத்து காலையில் வெறும் வயிற்றில் ஒரு ஸ்பூன் அளவில்  48 நாள்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டால் பெருவயிறு குறையும்.

ஒமம் , நாவல் கொட்டை, துத்தி , பிரண்டை - தலா 50 கிராம் ஏடுத்துப் பொடி செய்து, இரண்டு கிராம் பொடியை காலை ,மாலை சாப்பிட்டு வந்தால், ரத்த மூலம் உடனே குணமாகும். மூலக்கிருமிகளும் அழியும்.

ஒமத்தை நல்லெண்ணெய்யில் போட்டுக் காய்ச்சி வடி கட்டி, தலையில் தேய்த்துக் குளித்து வந்தால், சைனஸ் எனப்படும் பீனிச நோய் குடமாகும்.

ஒமம் , மிளகு  - தலா 50 கிராம் , பனைவெல்லம் (100 கிராம்) ஆகியவற்றை இடித்துப் பொடியாக்கி , நெல்லிக்காய் அளவு  காலையிலும், இரவிலும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பொருமல் , வயிறு உப்புசம் , பேதி போன்றவை குணமாகும்.

கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.