/
உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
கார்போகரிசி:
- தேமலுக்கான மேல்பூச்சு தைலம் கார்போக அரிசியை தண்ணீரில் ஊறவைத்து அதனுடன் பால்சேர்த்து பேஸ்டாக அரைக்கவும். பின்பு அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தைலமாக காய்ச்ச வேண்டும். இதை வடிகட்டி தேமல் இருக்கும் இடத்தில் மேல்பூச்சு பூசிவரவும். நீண்ட நேரத்துக்கு இந்த பூச்சை வைத்திருக்க கூடாது. உடலில் எரிச்சல் ஏற்படும் என்பதால், 15 நிமிடங்களில் கழுவிவிட வேண்டும்.
- உடல் துர்நாற்றம் , வேர்க்குரு நீங்க கார்போக அரிசி (100 கிராம்), பாசி பயிறு (500 கிராம்) , கஸ்தூரி மஞ்சள் பொடி(50 கிராம்) ஆகியவற்றை வறுத்து பொடியாக்கி கொள்ளவும். பின்னர் அதனுடன் தண்ணீர் கலந்து உடலில் பூசலாம். குளியல் பவுடராகவும் இதை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்தால் உடல் துர்நாற்றம் போக்கும். வேர்குரு, தோல்நோய்கள் சரியாகும்.
- வயிற்றுப் பூச்சிகள் வெளியேற கார்போக அரிசியை பொடிசெய்து அந்த பொடியை 1 முதல் 2 கிராம் வரை எடுத்துக் கொண்டு அதனுடன் சம அளவு மஞ்சள் பொடியை கலக்கவும். பின்னர் தேன் விட்டு குழைத்து சாப்பிட்டு வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.
- வெண் புள்ளி , வெண் குஷ்டம் நீங்க கார்போக அரிசியை பொடியாக்கி சிறிதளவு எடுத்துக்கொண்டு அதனுடன் மஞ்சள் பொடி, தேங்காய் எண்ணெய் சேர்த்து வெண்புள்ளி, வெண்குஷ்டம் உள்ள இடங்களில் தடவி இரவு முழுவதும் அப்படியே விட்டுவிட வேண்டும். காலையில் அதை கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்தால் வெண்புள்ளி, வெண்குஷ்டம் சரியாகும்.
- கார்போகரிசி சுத்தம் செய்யும் முறை கார்போக அரிசியை சுத்திகரித்துதான் பயன்படுத்த வேண்டும். கார்போக அரிசியை பசு மாட்டு சிறுநீரகத்தில் ஒருநாள் ஊறவைத்து வெயிலில் காயவைத்து பொடியாக்கி வைத்து கொள்ளலாம் அல்லது எழுமிச்சை சாறில் ஊற வைத்து எடுத்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால்தான் கார்போக அரிசியில் உள்ள தேவையற்ற நச்சு போகும். கசப்புதன்மை கொண்ட கார்போக அரிசியை அப்படியே பயன்படுத்தினால் வாந்தி ஏற்படும்.
KOVAI HERBAL CARE
VEGETABLES CLINIC
கோவை பாலா ,
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் Foot & Auricular Therapist
Cell : 96557 58609
Covaibala15@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திருவனந்தபுரத்தில் பலத்த பாதுகாப்புக்கிடையே பிரதமர் மோடி சாலை வலம்!

குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு; ஷுப்மன் கில் விளையாடவில்லை!

வரலாறு காணாத கடனில் தமிழ்நாடு! பியூஷ் கோயல் பேட்டி | ADMK | BJP
நூறு சாமி டீசர்!
வீடியோக்கள்
வீடியோக்கள்
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு
6 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு


