கூல் ரெசிபி ஃபலூடா உங்களுக்காக!

சப்ஜா விதைகளை இரவே ஊற வைத்து வைக்கவும். பாலை சுண்ட காய்ச்சவும்.
கூல் ரெசிபி ஃபலூடா உங்களுக்காக!

தேவையானவை:
வேக வைத்த சேமியா - அரை கிண்ணம்
ஜவ்வரிசி - அரை கிண்ணம்
சப்ஜா விதைகள் - 1 தேக்கரண்டி
பழத்துண்டுகள் - 1 கிண்ணம்
(கருப்பு திராட்சை (விதை இல்லாதது), மாம்பழம், 
ஆப்பிள், வாழைப்பழம், பைனாப்பிள் )
ரோஸ் சிரப் - 2 தேக்கரண்டி
கண்டன்ஸ்டு மில்க் - அரை டின்
வெண்ணிலா ஐஸ்கிரீம் - 1 கப்
பால் - 1 டம்ளர்

செய்முறை: சப்ஜா விதைகளை இரவே ஊற வைத்து வைக்கவும். பாலை சுண்ட காய்ச்சவும். ஒரு உயரமான கண்ணாடி டம்ளரில் முதலில் சப்ஜா விதையைப் போடவும் பிறகு பாதிபாலில் ரோஸ் சிரப் சேர்த்து கலக்கவும் பிறகு பழத்துண்டுகள் ஒவ்வொன்றாகச் சேர்தது கண்டன்ஸ்டு மில்க் பாதியளவு ஊற்றவும் பிறகு சேமியா, ஐவ்வரிசி ஒவ்வொரு லேயராக சேர்க்கவும். பிறகு பால், ரோஸ் சிரப், பழத்துண்டுகள் சேர்த்து கண்டன்ஸ்டு மில்க் ஊற்றி மேலே ஐஸ்கீரிம் போட்டு ஒரு தேக்கரண்டி சேர்த்தால் ஃப்லூடா தயார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com