புளியங்கொட்டைக் கஞ்சி
தேவையான பொருட்கள்
புளியங்கொட்டை - 100 கிராம்
பச்சரிசி நொய் - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் புளியங்கொட்டையை நன்கு வறுத்து தோல் நீக்கி உடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பச்சரிசி நொய்யை நன்கு வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து வைத்துள்ள அரிசி மற்றும் புளியங்கொட்டையை ஒரு பாத்திரத்தில் போட்டு அவற்றில் 800 மி.லி அளவு நீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நொய் நன்றாக வெந்த பின் தேவையான அளவு உப்புப் போட்டு இறக்கி வைத்துக் கொள்ளவும்.
இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு (2), உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப் போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.
குறிப்பு : அனைத்து காய்களையும், கீரைகளையும் நீராவியில் வேக வைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.
கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர்
96557 58609 / Covaibala