சுடச்சுட

    

    ஆடா கோழியா? உடல் எடை குறைப்புக்கு எந்த இறைச்சி சிறந்தது?

    By சினேகா  |   Published on : 02nd July 2019 01:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chicken

     

    நீங்கள் அசைவ பிரியராக இருந்தால், உங்கள் அன்றாட உணவில் இறைச்சி உணவு நிச்சயம் இருக்கும். கோழி மற்றும் வான்கோழி போன்ற இறைச்சி வகைகள் முதல் ஆட்டுக்குட்டி (மட்டன்) அல்லது பன்றி இறைச்சி போன்ற இறைச்சிகள் வரை, நீங்கள் தேர்வு செய்ய பலப் பல வகைகள் உள்ளன. உங்கள் எதிரில் எத்தனையோ அசைவ உணவுகள் இருக்கும்போது, அதிலிருந்து ஒன்றை நீங்கள் தேர்வு செய்வது கடினம்தான்.

    அதிலும் நீங்கள் உடல் எடைக் குறைப்பு முயற்சியில் ஈடுபட்டிருந்தால், இந்தத் தேர்வு இன்னும் கடினமாகிவிடும். எடைக் குறைப்பு முயற்சியை அத்தனை சுலபத்தில் உங்களால் விட்டுக் கொடுக்க முடியாது அல்லவா? கோழி மற்றும் ஆடு / பன்றி இறைச்சிக்கு இடையிலான வேறுபாடுகள் என்னவென்று பார்க்கலாம். அது உங்கள் எடைக் குறைப்புக்கு ஏற்ற சரியான உணவினை தேர்வு செய்ய உதவும். ரெடியா?

    1. இரும்புச் சத்து

    ஆடு / பன்றி இறைச்சியில் இரும்புச் சத்து மிக அதிகமாக உள்ளது. 100 கிராம் இறைச்சியில் 2.7 மி.கி இரும்புச் சத்து உள்ளது. இது கோழி இறைச்சியின் அதே பகுதியைக் கொண்ட இரும்புச் சத்தின் இரட்டிப்பாகும். 100 கிராம் கோழி இறைச்சியில் 1.3 மி.கி இரும்புச் சத்து மட்டுமே உள்ளது. எனவே, ஆடு / பன்றி இறைச்சியை தேர்வு செய்ய ஒரு தெளிவான காரணமாக அமைகிறது. மேலும் மயோகுளோபின் எனப்படும் சிவப்பு நிறமி ஆடு / பன்றி இறைச்சியில் அதிகமாக உள்ளது, இதில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

    2. கொழுப்புச் சத்து

    ஆடு / பன்றி இறைச்சியுடன் ஒப்பிடும்போது கோழி இறைச்சியில் குறைந்த அளவே கொழுப்புச் சத்து உள்ளது. ஆட்டுக்குட்டி மற்றும் மாட்டிறைச்சியில், 100 கிராமுக்கு 20 கிராம் கொழுப்பு உள்ளது. கோழி மற்றும் வான்கோழியில் 100 கிராமுக்கு தலா 14 கிராம் மற்றும் 7 கிராம் மட்டுமே உள்ளன. எனவே, கொழுப்பு சத்து குறைவாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், ஆட்டு இறைச்சியை விட கோழி இறைச்சிதான் சிறந்த தேர்வு. ஒமேகா 3 கொழுப்பு அமிலம் கோழி இறைச்சியில்தான் அதிகம் உள்ளது.

    3. புரதச் சத்து

    புரதச் சத்தைப் பொருத்தவரையில், கோழி இறைச்சிக்கும் ஆடு / பன்றி இறைச்சிக்கும் அதிக வித்தியாசம் இல்லை. இரண்டு வகைகளும் 100 கிராமுக்கு 25-30 கிராம் புரதத்தை வழங்குகின்றன.

    4. வைட்டமின்கள்

    இரண்டு வகைகளும் வைட்டமின் பி 2, பி 3, பி 5 மற்றும் பி 6 ஆகியவை ஏராளமாக உள்ளன. இந்த வைட்டமின்கள் அனைத்தும் மனித உடலின் அடிப்படை செயல்பாட்டிற்கு இன்றியமையாதவை. வைட்டமின் பி 12 ஆடு / பன்றி இறைச்சியில் கணிசமான அளவில் அதிகமாக உள்ளது. வைட்டமின் பி 12 ரத்த அணுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது மற்றும் உடலிலுள்ள செல்கள் முழுவதும் உங்கள் மரபணு பொருட்களில் டி.என்.ஏவை கவனித்துக் கொள்கிறது.

    5. இதய ஆரோக்கியம்

    பல ஆராய்ச்சிகளின் முடிவின்படி, ஆடு / பன்றி இறைச்சிக்கும் இதய ஆரோக்கியத்திற்கும் இடையே வலுவான ஒரு தொடர்பு உள்ளது. அதிகளவு நிறைவுற்ற கொழுப்புகள் சேர சேர, இதயத்தில் பிரச்னைகளும் அதிகரிக்கும். கோழி இறைச்சியில் செலினியம் நிறைந்துள்ளது. ஆடு / பன்றி இறைச்சி துத்தநாகத்தின் சிறந்த மூலமாகும். அறிவாற்றல் திறன் மற்றும் இருதய ஆரோக்கியத்திற்கு செலினியம் முக்கியமானது. இரண்டு இறைச்சிகளிலும் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் ஏராளமாக உள்ளன.

    6. புற்றுநோய் காரணி

    உலக சுகாதார நிறுவனம் ஆடு மற்றும் பன்றி இறைச்சியை புற்றுநோயை உண்டாக்கும் உணவாக வகைப்படுத்தியுள்ளது. அதிகளவு இந்த இறைச்சிகளை உட்கொள்வது பெருங்குடல் புற்றுநோய் உருவாக்குவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனால் தெரிந்து கொள்ள வேண்டியது, ஆடு / பன்றி இறைச்சி மற்றும் கோழி இறைச்சி இரண்டிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்றாலும், எடை குறைப்பு என வரும்போது கோழி இறைச்சியை உண்பதுதான் சிறந்த வழி.

    குறிப்பு: இந்தக் கட்டுரையில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் மருத்துவரின் ஆலோசனையின் மாற்றாக கருதப்படக்கூடாது. மேலும் விவரங்களுக்கு உங்கள்  மருத்துவரை அணுகவும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai