அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வயிற்று வலியை உடனே நீக்க உதவும் அருமருந்து

வயிற்று வலியால் அவதிப்படுவோர் இந்த சூரணத்தைப் பயன்படுத்தி பலனடையுங்கள். 

News image
வயிற்று வலியை உடனே நீக்க உதவும் அருமருந்து
Updated On :27 ஜனவரி 2024, 7:48 pm

தினமணி

வயிற்று வலியால் அவதிப்படுவோர் இந்த சூரணத்தைப் பயன்படுத்தி பலனடையுங்கள். 

தேவையான பொருள்கள்

லவங்கப் பட்டை          -       50 கிராம்

சுக்கு                             -       50 கிராம்

ஏலக்காய்                     -       50 கிராம்

செய்முறை

முதலில் தேவையான அளவு லவங்கப்பட்டை மற்றும் ஏலக்காயை  எடுத்து சுத்தப்படுத்திக் கொள்ளவும். சுக்கை மேல்தோல் நீக்கி சுத்தப்படுத்திக் கொள்ளவும்.

சுத்தப்படுத்தியப் பின்பு மூன்றையும் தனித்தனியாக அரைத்து பொடி செய்து பின்பு ஒன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும்.

பயன்கள்

இந்த சூரணம் வயிற்று வலியை உடனே நீக்க உதவும் அருமருந்தாகும். மேற்கூறிய குறைபாட்டினால் துன்பப்படுபவர்கள் மேற்கூறிய சூரணத்தை தயார் செய்து வைத்துக்கொண்டு குறைபாட்டினால் துன்பப்படும்பொழுது இரண்டு கிராம் அளவு  எடுத்து மோரில் கலந்து குடித்து வந்தால் வயிற்று வலி உடனே விலகும்.

நீங்கள் எடுத்துக் கொண்டியிருக்கிற மருந்துகளோடு இதனை  எடுத்துக் கொள்ளலாம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று முழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா 

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.