
நெஞ்சு எரிச்சலால் அவதிப்படுபவர்கள் இந்த அருமருந்தைப் பயன்படுத்திப் பயனடையுங்கள்.
இதற்கு தேவையான பொருட்கள்
குப்பைக் கீரை. - ஒரு கைப்பிடி, ஓமம் - 10 கிராம், மஞ்சள் தூள்- சிறிதளவு
எப்படி தயாரிக்க வேண்டும்?
முதலில் குப்பைக் கீரையை நன்றாக சுத்தப்படுத்தி ஆய்ந்து எடுத்துக் கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 500 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் ஆய்ந்து வைத்துள்ள குப்பைக் கீரையையும் அதனுடன் ஓமம் மற்றும் மஞ்சள் தூளையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நன்கு கொதித்து அதனை 100 மி.லி அளவாகச் சுண்டச் செய்து இறக்கி வடிகட்டிக் கொள்ளவும்.
பயன்கள்
இந்தக் கசாயம் நெஞ்சு எரிச்சலைக் குணப்படுத்த உதவும்.
நெஞ்சு எரிச்சலால் பாதிக்கப்படும் பொழுது இந்தக் கசாயத்தைத் தயார் செய்து கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்து வந்தால் நெஞ்செரிச்சல் சார்ந்த குறைபாடு நீங்கும்.
- கோவை பாலா
இயற்கை வாழ்வியல் நல ஆலோசகர் மற்றும் காய்கறி சிகிச்சையாளர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.