ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

உடல் எடை மற்றும் பெரு வயிற்றைக் குறைக்க உதவும் அருமருந்து

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் பெரு வயிற்றைக் கரைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இது அருமருந்து.

News image
கோப்புப்படம்
Updated On :15 பிப்ரவரி 2022, 9:44 am

தினமணி

தேவையான பொருட்கள்

மணத்தக்காளிக் கீரை ஆய்ந்தது    -   100 கிராம்

எலுமிச்சம் பழம்   -  அரை எலுமிச்சம் பழம்

சின்ன வெங்காயம்.  - 5

செய்முறை

முதலில் தேவையான அளவு மணத்தக்காளிக் கீரையை  எடுத்து ஆய்ந்து  பழுப்பு இலைகளை நீக்கி  சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ளவும். சின்ன வெங்காயத்தை நறுக்கிக்  கொள்ளவும்.

முதலில் ஆய்ந்த மணத்தக்காளிக் கீரையை நன்கு கொதிக்க வைத்த நீரில்  ஐந்து நிமிடம் போட்டு எடுத்துக் கொள்ளவும். அந்த மணத்தக்காளி கீரையை மிக்ஸியில் போட்டு அதனுடன் அரை எலுமிச்சம் பழத்தை தோலோடு நறுக்கிப் போட்டு வெங்காயத்தையும் சேர்த்து  அரைத்துச் சாறாக வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.

தீரும் குறைபாடுகள்

உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் பெரு வயிற்றைக் கரைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும்  உதவும் அற்புதமான கீரை. 

சாப்பிடும் முறை

இவ்வாறு தயாரித்து வைத்து எடுத்துள்ள  மணத்தக்காளிக் கீரைச் சாற்றைத் தினமும் காலை வேளை உணவிற்குப் பிறகு  சாப்பிட்டு வரவும். முதல் 48  நாட்கள் சாப்பிடவும். பின்பு தேவைக்கேற்ப தொடரவும்.

இரவு படுக்கப் போகும் முன் வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து  உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.