நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இரும்புச்சத்து அதிகரிக்க இதைச் செய்யலாம்..!

உடலுக்குத் தேவையான இரும்புச் சத்துக்களை அளிக்கக்கூடிய இந்தபானத்தைத் தொடர்ந்து எடுத்துவர நல்ல பலன் கிடைக்கும்.

News image
Updated On :21 ஜனவரி 2022, 5:00 pm IST

தேவையான பொருட்கள்

கொட்டை நீக்கிய பேரீச்சம் பழம்  - 10

உலர்ந்த திராட்சைப் பழம்.     -  10

ஏலக்காய்ப் பொடி.       -  5 சிட்டிகை

தேன்.            -   3 தேக்கரண்டி

தண்ணீர்.    -   தேவையான அளவு

செய்முறை

முதலில் பேரீச்சம் பழம் மற்றும் உலர் திராட்சை இரண்டையும் எடுத்துச் சுத்தப்படுத்தி நன்கு கழுவி எடுத்துக் கொள்ளவும். இரண்டையும் கழுவின பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு ஊறினபிறகு அதனை மிக்ஸியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து ஜூஸாக்கவும். பின்னர் அந்த ஜூஸூடன் ஏலக்காய்த் தூள் மற்றும் தேன் கலந்து சாப்பிடவும்.

சாப்பிடும் முறை

தயாரித்து வைத்துள்ள சாற்றை தினமும் காலை வேளை குடித்து வரவும்.

பயன்கள்

இந்த இயற்கை பானம் இரும்புச் சத்து மிக அதிகமாய் உள்ள பானம். உடலுக்கு உறுதித்தன்மையைத் தரக்கூடிய பானம். நரம்பு , இதயம் மற்றும் மூளையின் ஆற்றலை அதிகரிக்க உதவும். கண் பார்வைக்கு உறுதுணையாக இருக்க உதவும் பானம். தொண்டை அழற்சியை நீக்க உதவும் பானம். உஷ்ணத்தினால் உண்டாகக் கூடிய இருமலைப் போக்க உதவும் பானம்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து   உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா

இயற்கை மருத்துவம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.
Cell  :  96557 58609   ,  75503 24609
Covaibala15@gmail.com 
Kovai Bala YouTube channel :
https://www.youtube.com/channel/UC8OPbuqkQl4C63ITOCQ1apQ
https://t.me/kovaibalavegetableclinic

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.