அடுத்தவர்களின் சொந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுபவர்கள் பெண்களா ஆண்களா? ஆய்வு அறிக்கை

மற்றவர்களின் சொந்த விஷயங்களில் ஆர்வம் உடையவர்கள் பெண்கள்தான் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள்.
அடுத்தவர்களின் சொந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுபவர்கள் பெண்களா ஆண்களா? ஆய்வு அறிக்கை
Updated on
1 min read

மற்றவர்களின் சொந்த விஷயங்களில் ஆர்வம் உடையவர்கள் பெண்கள்தான் என்று நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அண்மையில் நடந்த ஆய்வொன்று (நம்மூர் ஆய்வு இல்லை வெளிநாட்டு ஆய்வு) அடுத்தவர் விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் பெண்ணை விட ஆணுக்குதான் அதீத ஈடுபாடு என்கிறது.

ஆண்களில் பலர் மற்றவர்களின் சொந்த விவகாரங்களை அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருப்பார்களாம். அதுவும் குறிப்பாக பெண்களைப் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்வதில் கூடுதல் ஆர்வம் ஆவார்கள் என்கிறது இந்த ஆய்வு. பெண்கள் வீட்டில் மட்டுமல்லாமல் அலுவலகத்திலும் வம்பு பேசுகிறார்கள் என்று பொதுவாக ஒரு குற்றச்சாட்டு முந்தைய காலங்களில் இருந்தது. ஆனால் நாங்களும் சற்றும் இளைத்தவர்கள் அல்ல என்று களத்தில் இறங்கிவிட்டனர் ஆண்கள். பெண்களாவது இல்லாதது பொல்லாததை வாய் கூசாமல் கூறமாட்டார்கள். ஆனால் ஆண்களுக்கு ஒரு விஷயம் கிடைத்துவிட்டால் அதை கண் காது மூக்கு வைத்து பில்டப் செய்துவிடுகிறார்களாம்.

ஆண்கள் இப்படி செய்வதும் ஒரு காரணமாகத்தான். எப்பாடுபட்டாவது ஒரு பெண்ணின் கவனத்தைப் பெறுவதற்காகத்தான் இப்படி செய்கிறார்களாம். ஆனால் இத்தகைய ஆண்களிடமிருந்து ஒரு அடி தள்ளியே இருப்பது நல்லது. ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் புரணி பேசும் இயல்பு மனிதர்களிடம் பல காலமாகவே இருந்து வருகிறது. ஆனால் அது அவர்களின் பெர்சனலைத் தீண்டும்போதுதான் பிரச்னையாகிறது.  அது காதல் உறவாக இருந்தாலும் சரி, நட்பாகவோ இல்லை சகோதர உணர்வாக என எந்தவிதமான உறவாக இருந்தாலும் ஆண்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நிலை பெண்களுக்கு உள்ளது. பெண்களே, உங்களுடைய குடும்ப விவகாரங்கள், சொந்தப் பிரச்னைகள், பணப் பிரச்னைகள் என எந்த விஷயத்தையும் இப்படி நல்லவர்கள் போர்வையில், வம்புக்கு அலையும் ஆண்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். எப்போதும் நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது ஒரே ஒரு விஷயம்தான் வீட்டினரைத் தவிர வேறு யாரும் வாழ்க்கையில் நம்பிக்கையானவர் இருக்க முடியாது. இது ஆண்களுக்கும் பொருந்தும். அந்த சைக்காலஜிகல் ஆய்வறிக்கை இப்படி பல விஷயங்களை அலசி ஆராய்கிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com