பகுதி 11 சமூகத் திறன் குறைபாடு இருந்தால் எப்படி சமாளிப்பது?

சமூக-உணர்வுத் திறன்கள் சரியாக அமைகின்றனவா என்று அடையாளம் காண்பது எப்படி?
பகுதி 11 சமூகத் திறன் குறைபாடு இருந்தால் எப்படி சமாளிப்பது?

சமூக-உணர்வுத் திறன்கள் சரியாக அமைகின்றனவா என்று அடையாளம் காண்பது எப்படி?

 சமூக-உணர்வு-ஆற்றல் ஒன்றுக்கொன்று ஊட்டமளிக்கும்,

ஒன்றின் மீது ஒன்றின் தாக்கம் இருக்கும். சமீப காலங்களில் இந்த சமூக-உணர்வு-ஆற்றல் மூன்றும் கூடி இருப்பது எந்த அளவிற்கு வாழ்வில் முக்கியமானது என்பதைப் பலதரப்பட்ட ஆராய்ச்சிகள் காட்டி இருக்கிறது. இவற்றில் குறிப்பிடத்தக்கது, சமூக-உணர்வு திறன்கள் பதமாக இருந்தால் அது அறிவாற்றல் திறன் மேம்படுவதற்கு மிகவும் உதவும் என்பதைக் காட்டி இருக்கிறார்கள். 

ஆற்றலின் வளர்ச்சி பலவிதமான கற்றுக் கொள்ளும் விஷயங்களில் அடங்கும். அறிந்து கொள்வதும் புரிந்து கொள்வதிலும் வெவ்வேறு விதங்கள் காணமுடியும். இதைத் தூண்டிவிடுவது ஆர்வம், வியப்பூட்டுகின்றவை (உணர்வின் உறவினர்கள்). ஏன், எப்படித் தேடல்களும் கற்றுக் கொள்ள ஊக்கவிக்கும். சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெறுவது, உதவி கேட்பது, தீர்வு கொள்வது  ஒவ்வொன்றுக்கும் சமூக உறவுத் திறன்கள் தேவை. முயற்சி, விடா-உழைப்பு, என்ற பலவற்றை உணர்வுத் திறன்கள் சாத்தியமாக்கும்.  இப்படிப் பல வகைகளில் உணரும் உணர்வை அறிவது, சமூக உறவைப் புரிந்து கொள்வது, இந்தத் திறன்களை வளர்த்துக் கொள்வது என்ற கலவையே ஆற்றலை வலுப்படுத்த உதவும்.

நமக்கு சமூகத் திறன் குறைபாடு இருந்தால் மற்றவர்களிடம் உதவி கேட்க சஞ்கோஜப்பட நேரிடலாம். அப்போது சந்தேகங்கள் தெளிவு பெறாமல் இருந்துவிடும். இவ்வாறு நேர்ந்தால் பலமுறை பள்ளிக்கூடம் சேர்ந்து வெளிவரும் பொழுதுதான் பெற்றோர்கள் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று கண்டு கொள்வார்கள். அந்தக் காலகட்டம், அந்தக் காலக்கட்டம் வரை காத்திருக்க வேண்டும் என்பது இல்லை. மதிப்பெண் குறைவு தெரியும்வரை இந்த நிலைகளுக்கு நாமும் எந்தவிதமான முக்கியத்துவம் தராதது மிக வருத்தப்பட வேண்டிய நிதர்சனம். மதிப்பெண் குறைந்தால் கூட, பலமுறை பள்ளியையோ, குழந்தையின் அறிவாற்றலையோ குறை கூறுவோமே தவிர, மூல காரணம் உணர்வுத் திறன், சமூகத் திறன்களின் குறைபாடு என்று புரிந்து கொள்ள மறுப்பதும் பொதுவாகக் காண்பதுதான்.

எழுதிய பாடத்தில் உள்ள பிழைகளினால் எழுதிய பாடத்தில் உள்ள பிழைகளினால் ஆசிரியை சபாஷ் சொல்லாமல், மதிப்பெண் குறைவினால் வெட்கம் மேலோங்கி வர, உதவி கேட்க வாய் வருவதில்லை. இந்த நிலைகளில், மனம்-உணர்வு-சமூக உறவாடுவதைக் காண்கிறோம். ஆற்றல் இவற்றுடன் ஒன்றுக்கொன்று பின்னி இருக்கும்.

அதே போல் உணர்வுகளும்தான். உதாரணத்திற்கு, நாம் பயந்து விட, அந்த உணர்வினால் மனம் தளர்ந்து மூளை வேலை செய்யாமலிருக்க, கற்பது பாதிக்கப்படும். கற்றுக் கொள்வதில் ஆர்வம் இல்லாமல் போனாலும் பாதிப்பு ஏற்படும். இப்படித்தான் கற்றலுடன் உணர்வுகள், சமூக திறன்களின் ஒன்றுக்கொன்று பிணைப்பு இருக்கிறது, ஒன்றுக்கொன்று தாக்கம் இருப்பதால் மூன்றும் நம்முடைய சிந்தனை-சொல்- செயல்-நடத்தைகளில் தென்படும். 

இந்த மூன்றுமான, ஆற்றல்-சமூக-உணர்வு திறன்கள் குழந்தைப் பருவத்திலேயே உதயமாகிறது. ஆரம்ப காலகட்டத்தில் அஸ்திவாரத்தை உறுதியாக அமைக்க வேண்டும் என்பதைத் தான் இந்த தொடரில் பேசி வந்திருக்கிறோம்

சமூகத் திறன் என்பது ஒருவர் மற்றொரு நபருடன் தொடர்பு கொள்ளும் நிலையிலும், மற்ற சமயங்களில் பலர் குழுவாகக் கூடி இருக்கையிலும் அவர்களுடன் உறவாடும் முறைகளில் தென்படும்.

பாப்பா, குழந்தைகள் என்று எடுத்துக் கொண்டால் அவர்களும், அவர்களைப் பார்த்துக் கொள்ளும் பெற்றோர்கள், மற்றவர்களும் இந்த உறவாடலில் அடங்குவார்கள். இவர்களின் இடையே நடக்கும் பேச்சு வார்த்தை, மொழி இல்லாத உறவாடல்கள் இந்த சமூகத் திறனை உருவாக்குகிறது, உணர்வுகளைத் தூண்டி விடுகிறது. இவற்றைப் புரிந்து, அதற்கு ஏற்றவாறு நடந்து கொள்வதில் அறிவாற்றல் உபயோகிக்கப் படுகிறது.

பந்தத்தை உருவாக்கி, பாசத்தை ஊட்டி குழந்தைகளுக்கு தேவைப்படும் அளவிற்குப் பாதுகாப்பு இருப்பது  இந்தத் திறன்களைப் புகட்டச் செய்கிறது. அதற்காகத் தான் மீண்டும் மீண்டும், இந்தத் தொடரின் ஒவ்வொரு கட்டத்திலும் வலியுறுத்திச் சொல்வது, ஆரம்பக் காலத்திலேயே அஸ்திவாரங்களைப் போட ஆரம்பிக்க வேண்டும். இந்தத் திறன்கள், உறவுகளுக்கு மற்றும் உடல்-மன நலத்திற்கும் மிகத் தேவை, முக்கியம் என்பது உறுதி. 

தேவை இல்லாத ஒன்று: அடம் பிடிப்பது

திறன்கள் சரியாக அமையவில்லை என்பதை ஆரம்பக் காலத்திலேயே கண்டு கொள்வது எப்படி? இந்தத் தொடரின் ஆரம்பத்தில் அடம் பிடிப்பு ஏற்படுவது எப்படி என்பதைப் பற்றிப் பேசினோம். குழந்தைகள் தன் நடத்தையின் விளைவுகளைக் கவனித்துக் கற்று கொள்வது நிதர்சனம். அதன் ஆரம்பம், இப்படி ஒரு ஒலியை ஏற்படுத்தினால் அது தமக்கு இந்த பதிலை அளிக்கும் என்று. வேண்டியது கிடைத்தால், பிறகும் அதே ஒலியைச் செய்து வருவார்கள், தேவையை அடையவும் செய்வார்கள். பாப்பா, குழந்தை நினைப்பது, "ஓ, இப்படி ஒலி எழுப்பும் போது, இது கிடைக்கும்". இதையே செய்யலாம் என்று செய்து வருவார்கள். ஒருவிதத்தில் இதுவே குழந்தையின் சமூகக் கற்றலில் மிக முக்கியமான முதல் கற்றல் என்றே சொல்லலாம். 

குழந்தை ஒன்றைக் கேட்கிறது. பெற்றோர் அதற்கு இணங்கலாம் இல்லை இணங்காமல் இருக்கலாம். குழந்தை தன் சார்பில் பல விதத்தில், எந்த வழி உபயோகிக்கலாம் என்று செய்து பார்க்கும். பொதுவாகக் காணப்படுவது: ஒலியை அதிகரித்துக் கேட்பது, சத்தம் போடுவது, துளி கூட கண்ணீர் வராமல்/சிந்தாமல் அழுவது, கை காலை ஆட்டிக் கேட்பது, அதே இடத்தில் நகராமல் இருப்பது, என்றப் பல தோற்றம். இதைச் செய்து, மற்றவர்கள் தனக்கு வேண்டியதைப் புரிந்து கொள்வார்கள், கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு என்று கூட கூறலாம். 

குழந்தைகள் முதல் முதலில் தற்செயலாக இவற்றைச் செய்வதும், அதற்குக் கைமேல் பலனாக அடைய நினைத்ததை பெற்று விட்டதும், மறுமுறை முயற்சி செய்வார்கள். மறு முறையும் தங்கள் வழியே ஆனால் "ஓ, இப்படி கேட்டால், கிடைக்கும் / தருவார்கள்" என்று முடிவு செய்து கொள்வார்கள். குழந்தைகளுக்கு வேறு வழி தெரியாததால் இது சரி இல்லை என்றே புரிந்து கொள்ளாமல் இருந்து விடுவார்கள். 

மேலும், குழந்தை இவ்வாறு கேட்க, பக்கத்தில் இருப்பவர்கள் "குழந்தைதானே" என்று சொல்லி, தர ஊக்க வைப்பதும் உண்டு. குழந்தை புரிந்து கொள்வது "நான் இப்படி கேட்பது, சரிதான்" என்று. இன்னும் சில நேரங்களில், பக்கத்தில் இருப்பவர்கள் கூடி வேடிக்கை பார்ப்பது மட்டும் இல்லாமல் குழந்தைக்குப் பரிந்து பேசினால், குழந்தைகள் தன் வழி சரி வழி என்றே ஏற்றுக் கொள்வார்கள். இப்படிப் பல முறை பல மனிதர்கள் குழந்தை செய்வதை திருத்தாமல் இணங்கிக் கொடுக்கையில், அப்படியே செய்து வருவார்கள். 

குழந்தை, இவ்வாறு செய்வது பலவீனத்தின் அறிகுறிகள் என்பதை அறிய சந்தர்ப்பம் இல்லாமலேயே போய்விடும். தனக்கு ஏதேனும் வேண்டும் என்றால் அதற்கு கூச்சல், இரைச்சல், அழுகை உபயோகிப்பது எதிர்மறையான வழியாகிறது. நாளடைவில் சமூகத் திறன்கள், உணர்சிகளை கட்டுப்படுத்திக் கொள்ளும் திறன்கள் வளர வாய்ப்பில்லாமல் போக, அவைகளை பலவீனமாகவும் செய்து விடும்.  தவிர, தான் இஷ்டம் போல நடந்து கொள்ளலாம், எதை இஷ்டப் பட்டாலும் பெற்றுக் கொள்ளலாம் என்ற தவறான கற்றலுக்கு இடம் கொடுக்கும்.

மேலும் குழந்தை இப்படியும் இந்த சூழ்நிலையினால் புரிந்து கொள்வது, குழந்தை தான் செய்யும் விதமே எல்லோரும் ஏற்றுக்கொள்வதால் முடிவு செய்வது தான் என்று. இது மிக தவறானது. குழந்தைக்கு சரி- தவறு புரிய வைப்பதற்கு பதிலாக முடிவெடுக்க அவர்களிடம் விட்டுவிட்டால் அது நலனை குறிப்பதில்லை. 

குழந்தையைப் பொருத்தவரை புரிந்து கொள்வது, கேட்டால் கிடைத்துவிடும் என்று. விளைவு? ஒன்று தேவைதானா என்று சிந்திக்க கற்றுக் கொள்ள மாட்டார்கள், பொறுத்து காத்திருந்து பெற்றுக் கொள்ளலாம், முயற்சி செய்து அடையலாம் என்று தன் தூண்டுதல்களை கட்டுப்படுத்த, தாமதிக்கக் கற்றுக் கொள்ள மாட்டார்கள். அத்துடன் கிடைக்காவிட்டால் அந்த நிலையை சமாளிக்க தெரியாமல் தவிப்பை எப்படிக் கையாளுவது என்பது தெரியாமலேயே போய்விடும்.

உணர்வுகளைப் பெயரிடுதலின் லாபங்கள்

தவிப்பை, சஞ்சலத்தைச் சமாளிக்க கஷ்டப்படுவது, கையாளத் தெரியாமல் தவிப்பதின் காரணம், பல நேரங்களில் உணர்வுகளைச் சரியாக  அடையாளம் காணத் தவறுவதாலும் இருக்கலாம். இது குழந்தையின் உணர்வு அடையாள இயலாமை என்று குறிப்படப் படும். 

நாமே ஏதோ பாதிப்பு ஏற்ப்பட்டால், "கோபம் கோபமாக வருது" எனச் சொல்வோம். மனம் மிகச் சோர்ந்து போனால் "அழணும் போல இருக்கிறது" என்போம். "அடடா கூச்சமாக இருக்கிறது" என்று சொல்லும் போதெல்லாம் நமக்கு உணரும் உணர்வை வெளிப்படையாகப் பகிருகிறோம். பொதுவாக எட்டு வகை உணர்வுகள் அதிக பட்சம் தென்படுவது: கோபம், சந்தோஷம், அருவருப்பு, சலிப்பு, பயம், துணிச்சல், சோகம், ஆச்சர்யம் ஆகும்.

இந்த எட்டு உணர்வுகளின் நுணுக்கங்கள் பல உண்டு. ஆராய்ச்சியாளர்கள் உணர்வின் பெயரைத் தெரிந்து, அடையாளம் கண்டு கொண்டு உபயோகித்தல் நமக்குள் நடப்பதை வெளிப்படுத்த உதவுகிறது என்று காட்டி இருக்கிறார்கள். இதுவே உணர்வுத் திறனை மேம்படுத்தும் முதல் கட்டமாகும் என்பதையும் நிரூபித்து இருக்கிறார்கள். குழந்தைகள் கற்றுக் கொள்ள, அவர்களுடன் இருப்பவர்கள் இந்த சொற்களை அறிந்து உபயோகிக்க வேண்டும். அதை கவனிக்கையில் குழந்தைகளும் அவற்றைப் பயன்படுத்தக் கற்று கொள்வார்கள். 

உதாரணத்திற்கு, பொதுவாகக் குழந்தை ஒரு பொருள் கேட்டால் அது கிடைக்கும் என எண்ணுவார்கள். அங்குள்ளவர் அதைத் தரத் தாமதித்தால் அது குழந்தைக்குச் சலிப்பை ஏற்படுத்தலாம். குழந்தை இந்த சலிப்பை உணராமல் சத்தம் போடத் துவங்கலாம். இதை அங்குள்ள பெரியவர்கள் குழந்தையிடம் "தர நேரம் ஆனதும் சலிப்புத் தட்டி இப்படிச் செய்கிறாயா?" என்று விவரித்தால், குழந்தை தன் மனநிலையை அந்த சலிப்பு உணர்வுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முயலுவார்கள். அதே போல் ஒவ்வொரு உணர்வை உணரும்போது அந்த உணர்வு நிலையைப் பெயரிட்டுச் சொல்வது உதவும், அதுவும் இரண்டு வழிகளில். ஒன்று, குழந்தைக்கு உணர்வின் பெயர் சொல்லத் தெரியவரும். உதாரணத்திற்கு, பொதுவாகக் குழந்தை ஒரு பொருள் கேட்டால் அது கிடைக்கும் என எண்ணுவார்கள். அங்குள்ளவர் அதைத் தர தாமதித்தால் அது குழந்தைக்குச் சலிப்பை ஏற்படுத்தலாம். குழந்தை இந்த சலிப்பை உணராமல் சத்தம் போடத் துவங்கலாம். இதை அங்குள்ள பெரியவர்கள் குழந்தையிடம் "தர நேரம் ஆனதும் சலிப்புத் தட்டி இப்படிச் செய்கிறாயா?" என்று விவரித்தால், குழந்தை தன் மனநிலையை அந்த சலிப்பு உணர்வுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ள முயலுவார்கள். அதே போல் ஒவ்வொரு உணர்வை உணரும்போது அந்த உணர்வு நிலையைப் பெயரிட்டுச் சொல்வது உதவும், அதுவும் இரண்டு வழிகளில். ஒன்று, குழந்தைக்கு உணர்வின் பெயர் சொல்லத் தெரியவரும்.

வலுப்படுத்தும் சமூக உணர்வு திறன்கள்

  • உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்

  • உணர்வின் பெயர்களை அறிந்து கொள்ள வேண்டும்.

  • உங்களுடன் குழந்தைகள் இருக்கும் போது உணர்வுகள் என்ன ஏது என்பதை விளக்குங்கள்.

  • தங்களுடன் இருப்பவர்களைப் பார்த்து குழந்தைகள் அதே போலச் செய்வது இயல்பு. அவர்களின் செயல்கள், வார்த்தைகள் நமக்கும். நம்முடைய பேச்சு, நடவடிக்கைகள் இதை மனதில் வைத்துச் செய்வது நன்று.

  • உங்களது உணர்வுகளைப் பற்றிப் பேசப் பேச, குழந்தைகள் அவற்றைப் பற்றிப் புரிந்து கொள்ள வாய்ப்பாகிறது. 

  • புத்தகங்கள் படிக்கையில், படங்கள் பார்க்கையில், விளையாடும் போது, உணர்வு- சமூக உறவை, தொடர்பை மேலும் அறிய, பயன்படுத்தும் முறைகளைப் புரிந்து கொள்ள, நாமும் விளங்க வைக்க வாய்ப்பாகிறது. 

இது போன்ற பல விஷயங்களை இந்தத் தொடரில் பேசி வந்தோம். வேறு ஒரு சிந்தனையுடன் மறுபடியும் சந்திப்போம்

என்றென்றும் மிகச் சிறந்ததைப் பெற,

மிகச் சிறந்ததைக் கொடு!

முற்றும் 

மனநலம் மற்றும் கல்வி நிபுணர் மாலதி சுவாமிநாதன்     malathiswami@gmail.com

************************************************************

Related Article

பகுதி 10 உங்களின் தனித்துவங்கள் எவை?

பகுதி 8: இப்போதே போடுங்கள் அஸ்திவாரம்!

பகுதி 7: உங்கள் குழந்தை அடம் பிடிக்கிறார்களா? சரியாக சாப்பிட மறுக்கிறார்களா?

பகுதி 6: உங்கள் குழந்தை மிகவும் அடம் பிடிக்கிறதா? இதுதான் காரணங்கள், உடனே சரி செய்யுங்கள்!

பகுதி 5: அடம் பிடிப்பு, கவனம் ஈர்க்க முயற்சி?

பகுதி 4 'வேண்டியதைப் பெறுவது எப்படி?அடம் பிடிப்பும் நிலாச் சோறும்!'

பகுதி 3: அதிவேகமான கற்றல் இப்போதே!

பகுதி 2 - வளர்ப்பைச் சிறப்பிக்க, ஆரம்பத்திலேயே ஆரம்பிப்போம்..

பகுதி 1 வளர்ப்பைச் சிறப்பிக்க: மிகச் சிறந்ததைப் பெற, மிகச் சிறந்ததைக் கொடு!

பகுதி 9: உங்கள் குழந்தைகள் யாரை பிரதிபலிப்பார்கள்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.