டென்ஷனிலிருந்து விடுபட தினமும் 10 நிமிடம் போதும்!

தினமும் ஒரு பத்து நிமிடம் தியானம் செய்தால் அது உங்கள் மனம் கண்டபடி சுற்றியலைவதைத்
டென்ஷனிலிருந்து விடுபட தினமும் 10 நிமிடம் போதும்!
Published on
Updated on
1 min read

தினமும் ஒரு பத்து நிமிடம் தியானம் செய்தால் அது உங்கள் மனம் கண்டபடி சுற்றியலைவதைத் தடுக்கும். தவிர திரும்பத் திரும்ப மனத்தில் தோன்றும் தேவையற்ற எண்ணங்கள் மற்றும் பதற்றமான நினைவுகளையும் தவிர்த்து விடும் ஆற்றல் தியானத்துக்கு உள்ளது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

வாட்டர்லூவைச் சேர்ந்த ஆராய்ச்சிக் குழுவினர் இதனை கண்டுபிடித்துள்ளனர். இந்த நொடியில் ஏற்படக்கூடிய முழுமையான விழிப்புணர்வு பதற்றமான மனநிலைக்கு மூல காரணமான கடந்த கால வலிகளை மறக்க செய்துவிடும் என்கிறார்கள். 

ஆராய்ச்சியாளரும் வாட்டர்லூவில் பி ஹெச் டி மாணவருமான மென்க்ரான் க்ஸு இதைப் பற்றி கூறுகையில், 'எங்கள் ஆராய்ச்சி முடிவின் படி மிகவும் பதற்றமான மனிதர்களின் மனத்தை தியானத்தின் மூலம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்’ என்றார்.

தினமும் தியானம் செய்வதன் மூலம் எதற்கெடுத்தாலும் டென்ஷன் அடைவோரின் மனநிலையில் பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும். முக்கியமாக அவர்களின் துயரம், கவலை போன்ற பழைய விஷயங்களிலிருந்து விடுபட்டு, இந்த நொடியில் உலகம் எப்படி உள்ளது என்ற புதிதான கணத்தில் அவர்களின் கவனத்தை திசை திருப்ப முடியும். இதன் மூலம் அவர்கள் தம் வேலையை கவனத்துடன் சிறப்பாக  செய்ய முடியும் என்கிறார்கள் இக்குழுவினர்.

இந்த ஆராய்ச்சிக்காக, பதற்றமும் மன அழுத்தமும் உடைய 82 நபர்கள் அடங்கிய குழுவை ஒழுங்கமைத்தனர். அவர்களுக்கு கணினியில்
ஒரு சிறிய வேலை கொடுக்கப்பட்டது. அவர்கள் எத்தகைய ஈடுபாட்டுடனும் கவனமாக அதை செய்து முடித்தனர் என்பதை ஆய்வு செய்தனர். இந்த பங்கேற்பாளர்களை இரண்டு குழுக்குகளாக பின்னர் பிரித்தார்கள். ஆய்வாளர்களின் அறிவுறுத்தலின் படி முதல் குழுவினருக்கு ஒலிக்கோப்பை கொடுக்கப்பட்டது. இரண்டாவது குழு எளிமையான தியானப் பயிற்சி மேற்கொண்டனர்.

மனப் பதற்றம் உள்ள நபர்கள் ஒரே வேலையை திரும்ப திரும்ப செய்ய வேண்டி இருந்தது. காரணம் அவர்களால் புதிதாக எதையும் கற்றுக் கொள்ள முடிவதில்லை. செய்து முடிக்க வேண்டிய வேலையையும் திறம்பட செய்ய முடிவதில்லை என்றார் க்ஸு. மேலும் அவர் கூறுகையில், மனம் அலைபாய்வதற்கான முக்கிய காரணம் ஒரு மனிதனின் மனசாட்சி சம்பந்தப்பட்ட நினைவுகள் தான் என்றார்.

இந்த ஆராய்ச்சியில் க்ஸுவுடன் சேர்ந்து பணி புரிந்தவர்கள் வாட்டர்லூவின் சைக்காலஜி ப்ரொபஸர் க்ரிஸ்டின் பர்டன், டானியல் ஸ்லைலெக் மற்றும் ஹார்வேர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பால் செலி ஆகியோர்.  இந்த ஆய்வறிக்கை ஜர்னல் கான்ஷியஸ்னெஸ் அண்ட் காக்னிஷன் எனும் பத்திரிகையில் வெளியிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com