அடையாறு புற்றுநோய் அறக்கட்டளைக்கு நிதி உதவும்பொருட்டு அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாஸ் நகரில் ஒரு மாபெரும் இன்னிசை விருந்து நடைபெறவுள்ளது.
இந்த இன்னிசைக்கச்சேரியை தீபாவளியைமுன்னிட்டு டெக்சாஸ் மாநிலத்தில் டல்லாசில் உள்ள மெட்ரோப்ளக்ஸ் தமிழ் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
பிரபல பாடகர் பிரபு குழுவினர் வழங்கும் இன்னிசைக்கச்சேரி டெக்சாசில் கார்லாண்ட் பகுதியிலுள்ள ப்ளாசா தியேட்டரில் வருகின்ற அக்டோபர் திங்கள் 10ம்தேதி மாலை 4.30மணிக்கு நடைபெறுகிறது.
இந்தத் தகவலை டல்லாஸ், மெட்ரோப்ளக்ஸ் தமிழ் சங்கத் தலைவர் ராம்கி இராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.










