தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

"திஹார் சிறைக்குச் செல்ல அச்சமாக உள்ளது'

""உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தில்லி திஹார் சிறைக்குத் திரும்பிச் செல்ல தயக்கமாக உள்ளது; அதனால் எங்களை வேறு

Updated On :11 மார்ச் 2013, 9:56 pm

""உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால் தில்லி திஹார் சிறைக்குத் திரும்பிச் செல்ல தயக்கமாக உள்ளது; அதனால் எங்களை வேறு சிறையில் அடையுங்கள்'' என்று தில்லி மாணவி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேர் விரைவு நீதிமன்ற நீதிபதி வினோத் கன்னாவிடம் திங்கள்கிழமை முறையிட்டனர்.

தில்லி மாணவி பாலியல் வழக்கு விசாரணை சாகேத் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றவாளிகளாகச் சேர்க்கப்பட்ட முகேஷ் சிங், பவன் குப்தா, அக்ஷய் தாகுர் சிங், வினய் சர்மா ஆகிய நான்கு பேரும் திங்கள்கிழமை காலையில்  பலத்த பாதுகாப்புடன் சாகேத் விரைவு நீதிமன்ற நீதிபதி வினோத் கன்னா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கு விசாரணை தொடங்கும் முன்பாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் வி.கே. ஆனந்த், ""திஹார் சிறையில் முக்கிய குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்த ராம் சிங் மரணம் அடைந்து விட்டார். அவரது சாவில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. அதனால், சிறைக்குள் குற்றம் சாட்டப்பட்ட மற்ற நான்கு பேரின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நிலவுகிறது. அதனால், இவர்களை வேறு சிறைக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்'' என்று கேட்டுக் கொண்டார்.

"இது குறித்து பரிசீலிக்கப்படும்' என்று நீதிபதி கூறியதையடுத்து அவரிடம் பேசிய முகேஷ் சிங் உள்ளிட்ட நால்வர், ""எங்களை மீண்டும் திஹார் சிறைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டாம். வேறு எந்தச் சிறைக்கும் செல்ல நாங்கள் தயாராக உள்ளோம்'' என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.