சென்னையில் சிபிஐ அதிகாரிகள் வியாழக்கிழமை நடத்திய சோதனை, யாரையும் குறி வைத்து உள்நோக்கத்துடன் நடத்தப்பட்டதல்ல என்று சிபிஐ தலைமையகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக தில்லியில் சிபிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
உரிய வரி செலுத்தாமல் இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த 33 சொகுசு கார்கள் தமிழ்நாட்டில் உள்ளதாக புகார் வந்தது.
இது தொடர்பாக, தமிழ்நாட்டில் 18 இடங்களில் வியாழக்கிழமை சோதனை நடத்தப்பட்டது என்று சிபிஐ செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து தில்லி சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:
திமுக பொருளாளர் ஸ்டாலினின் மகன் உதயநிதிக்கு சொந்தமாக ஹம்மர் கார் இருப்பதாக தெரியவந்து, அங்கு அதிகாரிகள் சென்று தேடினர். ஆனால், அங்கு அந்த கார் இல்லை.
சோதனையில் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக்கழக வேந்தர் வி. ஆர். வெங்கடாசலம் என்பவர்வசம் இருந்த ஏழு கார்கள்; எம்ஜிஎம் குழும நிறுவனத்துக்குச் சொந்தமான இரண்டு கார்கள்; ஜேஆர்ஏ டவர்ஸ் நிறுவனத்தின் ஜான்சனுக்குச் சொந்தமான ஒரு கார்; ஜி.கே. ஷெட்டி என்பவருக்குச் சொந்தமான ஐந்து கார்கள்; ராஜா சங்கர் என்பவருக்கு சொந்தமான 2 கார்கள் வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பது கண்டுபிடிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சேலம் வல்லுறவு விவகாரம்: காவல் துறைக்கு தெரியாமல் நடந்திருக்குமா? சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்!

”பாமக போட்ட பிச்சை!” சி.வி. சண்முகம் கடும் விமர்சனம்! | ADMK | EPS

இன்றைய செய்திகள் ஜூன் 14 - நேரலை!

உலகளவில் இரண்டாமிடம்... ரஷியாவிடம் அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


