தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

புற்றுநோய் மருந்துக்கு காப்புரிமை: ஸ்விஸ் நிறுவன கோரிக்கையை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

ரத்தப் புற்றுநோய்க்கான தனது மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை அளிக்க வேண்டுமென்று ஸ்விட்சர்லாந்தின்

News image
Updated On :2 ஏப்ரல் 2013, 2:28 am IST

ரத்தப் புற்றுநோய்க்கான தனது மருந்துக்கு இந்தியாவில் காப்புரிமை அளிக்க வேண்டுமென்று ஸ்விட்சர்லாந்தின் நோவார்டிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம் விடுத்த கோரிக்கையை உச்ச நீதீமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.

பொதுப்படையான இந்த மருந்தை இந்திய நிறுவனங்கள் தயாரிக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டுமென்று ஸ்விஸ் மருந்து நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சுமார் 7 ஆண்டுகள் நடைபெற்ற சட்டப் போராட்டத்துக்குப் பின் இந்திய மருந்து நிறுவனங்களுக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்துள்ளது.

பன்னாட்டு நிறுவனமான நோவார்டிஸ் தயாரிக்கும் இந்த மருந்தை ஒரு மாதம் பயன்படுத்த நோயாளிகள் ரூ.1.2 லட்சம் வரை செலவிட வேண்டியுள்ளது. அதே நேரத்தில் இந்திய நிறுவனங்கள் ரூ.8 ஆயிரத்துக்கு இதனை வழங்குகின்றன.

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் சார்பில் ஸ்விட்சர்லாந்து நிறுவனத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடிய வழக்குரைஞர் பிரதிபா சிங், "உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு, இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கிடைத்துள்ள வெற்றி.

புதிய கண்டுபிடிப்புகளுக்குத்தான் காப்புரிமை பெற முடியும். ஒரே மாதிரியான பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு காப்புரிமை பெற முடியாது. இந்திய நிறுவனங்கள் நோயாளிகளுக்கு குறைந்த விலையில் புற்றுநோய்க்கான மருத்துகளை வழங்க முடியும்' என்றார்.

இந்திய மருந்து தயாரிப்பு கூட்டமைப்பு, இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்றும், ஏழை நோயாளிகளின் நலன் காக்கும் தீர்ப்பு என்றும் கூறி வரவேற்றுள்ளனர்.

இனிமேல், இந்தியாவில் ஆய்வு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக முதலீடு செய்யப்போவதில்லை என்று நோவார்டிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.