தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

மொபைல் கோபுரத்தில் ஏறி எம்எல்ஏ ஆர்ப்பாட்டம்

ராஜஸ்தானில் மூன்று மொபைல் போன் கோபுரங்களை இடம் மாற்ற வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. மொபைல்

Updated On :2 ஏப்ரல் 2013, 2:51 am IST

ராஜஸ்தானில் மூன்று மொபைல் போன் கோபுரங்களை இடம் மாற்ற வலியுறுத்தி, காங்கிரஸ் எம்.எல்.ஏ. மொபைல் கோபுரத்தின் மீது ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

ராஜஸ்தான் மாநிலம் படி சத்ரி தொகுதி எம்.எல்.ஏ.வாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரகாஷ் சந்திர சௌதரி இருக்கிறார். இவர் தனது தொகுதியில் மக்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மூன்று மொபைல் போன் கோபுரங்களையும் ஆளில்லாத பகுதிக்கு இடம் மாற்றுமாறு வலியுறுத்தி வந்தார்.

இந்நிலையில், திங்கள்கிழமை காலை அவற்றில் ஒரு கோபுரத்தின் மீது மளமளவென்று ஏறி தனது கோரிக்கையை வலியுறுத்தினார்.

அங்கு விரைந்த போலீஸôரும், மாவட்ட அதிகாரிகளும் அவரிடம் சமரசம் பேசி கோரிக்கை குறித்து பரிசீலிப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து எம்.எல்.ஏ. மொபைல் கோபுரத்திலிருந்து கீழே இறங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.