ஜமாத் இ-இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் இஸ்லாமிய பெண்கள் பிரிவு பயங்கரவாதத்துக்காக பெண்களுக்கு பயிற்சியளித்து வருவதாக மும்பை போலீஸார் வெளியிட்ட சுற்றறிக்கையால் புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இந்த சுற்றறிக்கையை வெளியிட்டதற்காக மும்பை போலீஸ் மன்னிப்புக் கேட்காவிட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருப்பதாக மகாராஷ்டிர மாநில ஜமாத் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் முகமது அஸ்லாம் காஸி கூறியுள்ளார்.
மும்பை போலீஸார் வெளியிட்ட சுற்றறிக்கை காவல்துறையினருக்கு மட்டுமானது. பொதுமக்களுக்கானது அல்ல என்று போலீஸ் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய முஸ்லிம் அமைப்புகளில் ஒன்றான ஜமாத் இ-இஸ்லாமி ஹிந்த், 40-க்கும் மேற்பட்ட மேல்நிலைப்பள்ளிகள், 4 ஜூனியர் கல்லூரிகளை மகாராஷ்டிரத்தில் நடத்தி வருகிறது. இங்கு இஸ்லாமிய பெண்கள் பிரிவும் உள்ளது.
இந்த அமைப்பினர் தங்கள் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் முஸ்லிம் மாணவிகளை பயங்கரவாதத்தில் ஈடுபடுத்தும் நோக்குடன் மூளைச் சலவை செய்து வருகின்றனர். பயங்கரவாதப் பயிற்சியும் மாணவிகளுக்கு அளிக்கப்பட்டு வருகிறது என்று மகாராஷ்டிர போலீஸாரின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த மாதம் வெளியிடப்பட்ட இந்த சுற்றறிக்கை இப்போது மகாராஷ்டிர போலீஸாரைத் தாண்டி வெளியே கசிந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மீண்டும் சமனில் முடிந்த இன்டர் மியாமி ஆட்டம்: இளம் வீரர்களுடன் அசத்திய மெஸ்ஸி!

ரோஹித் சர்மா, விராட் கோலி வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!
வீட்டுக் குறிப்புகள்...

கன்னியாகுமரியில் விசில் ஊதியவாறு சைக்கிள் ஓட்டிய விஜய்!
வீடியோக்கள்

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

