காவல் துறையினர் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்துவது குறித்து விசாரிக்க ஆணையம் அமைப்பது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் பதிலளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் பிகாரிலும், பஞ்சாபிலும் காவல்துறையினர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக கடுமையான விமர்சனம் எழுந்தது. இந்நிலையில், காவல்துறை புகார் ஆணையம் அமைப்பது தொடர்பாக 2006-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த மாநில அரசுகள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளன என்று உச்ச நீதிமன்றம் கேள்வியெழுப்பியுள்ளது.
இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.எஸ்.சிங்வி தலைமையிலான நீதிபதி முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளதாவது:÷""காவல்துறை புகார் ஆணையம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து 7 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அது தொடர்பாக பல மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளன. காவல் துறை அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகிறது என்ற குற்றச்சாட்டு முன்பைவிட பல மடங்கு அதிகரித்து விட்டது. உடனடியாக காவல்துறையை சீரமைக்க வேண்டும். வி.ஐ.பி.க்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ள காவலர்கள் அனைவரையும் பொதுமக்களுக்கு பாதுகாப்பளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். காவலர்களின் திறனை மேம்படுத்த வேண்டும். இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் ஒரு நொடியில் நிகழ்ந்துவிடாது. காவல் துறை புகார் ஆணையம் அமைப்பது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், அந்த ஆணையம் அமைக்கப்பட்டிருந்தால் கூட்டம் நடைபெற்ற விவரங்கள் உள்ளிட்டவை குறித்து அனைத்து மாநில அரசுகளும், யூனியன் பிரதேச நிர்வாகங்களும் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடுகிறேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட் வினாத்தாள் கசிவு: நீதிமன்றக் காவலில் உள்ள மூவரிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி!

பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!

நீர் அருந்துவதால் இவ்வளவு பலன்களா?
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


