சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

கர்நாடகத்தில் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த அதிமுகவை ஆதரியுங்கள்: தமிழக அமைச்சர் கே.பி.முனுசாமி

தமிழகத்தைப் போல் கர்நாடகத்தில் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த அதிமுக வேட்பாளர்களை ஆதரியுங்கள் என்று தமிழக உள்ளாட்சித் துறை

News image
Updated On :21 ஏப்ரல் 2013, 11:36 pm

தமிழகத்தைப் போல் கர்நாடகத்தில் சமூக நலத் திட்டங்களை செயல்படுத்த அதிமுக வேட்பாளர்களை ஆதரியுங்கள் என்று தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்தார்.

பெங்களூர் காந்திநகர் தொகுதியில் சனிக்கிழமை அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. அதில், கர்நாடக மாநில அதிமுக செயலரும், காந்திநகர் தொகுதி அதிமுக வேட்பாளருமான வா.புகழேந்தியை அறிமுகப்படுத்திய பின்னர், அவர் இவ்வாறு பேசினார்.

மேலும் அவர் பேசியது: இந்திய துணைக் கண்டத்தில் தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா பல்வேறு சமூக நலத் திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவர்களுக்கு இலவசப் புத்தகம், நோட்டு, பென்சில் உள்ளிட்ட கல்விக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள் வழங்கப்படுகின்றன. இதனால், 92 லட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

கர்நாடகத்தில் பாஜக ஆட்சிப் பொறுப்பு ஏற்றபோது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி வழங்குவதாகக் கூறினார்கள். ஆனால், அதை பாஜக அரசு செயல்படுத்தவில்லை. ஆனால், தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா, 1.85 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு 20 கிலோ விலையில்லா அரிசியை வழங்கி வருகிறார். இதற்காக ரூ. 4,900 கோடி மானியம் வழங்கப்படுகிறது.

திருமண வயதிற்கு வந்த பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கப் பணம், தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. கர்நாடகத்தில் இதுபோன்ற சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றால், சட்டப்பேரவைக்கு போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர்களை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும்.

தமிழகம் மட்டுமல்லாது சர்வதேசத்தில் தமிழர்களுக்கு பிரச்னை என்றால் ஓடிவந்து குரல் கொடுத்து, ஆதரிப்பவர் முதல்வர் ஜெயலலிதா என்றார் அவர்.

நிகழ்ச்சியில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் முகமதுஜான், பொதுப் பணித் துறை அமைச்சர் கே.வி.ராமலிங்கம், தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், கர்நாடக மாநில அதிமுக இணைச் செயலர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.