சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

புணே குண்டு வெடிப்பு வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல்

புணே குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாத தடுப்புப் படையினர் புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

Updated On :1 மே 2013, 5:31 pm

புணே குண்டுவெடிப்பு வழக்கில் பயங்கரவாத தடுப்புப் படையினர் புதன்கிழமை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி புணேயில் 4 இடங்களில் குண்டு வெடிப்பு நிகழந்தது.

இவ்வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 8 பேர் மற்றும் தலைமறைவாக உள்ள 5 பேர் மீது மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்பு படை புணேயில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் 3857 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்திய முஜாஹுதின் அமைப்பினர், லஷ்கர் இ தொய்பா உதவியுடன் குண்டு வெடிப்புகளை நிகழ்த்தினர் என குற்றம் சாட்டியுள்ளனர். 300 சாட்சிகளின் வாக்குமூலங்கள் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.