மேற்கு வங்க மாநிலம், மிதுனபுரி மாவட்டத்தில் உள்ள வீடு ஒன்றில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர்.
விபத்தில், ரஹீமா பீவி (31) மற்றும் அவரது ஒரு வயது மகன், மிது அலி (28) மற்றும் அவரது 6 மாத மகள் ஆகிய நான்கு பேரும் தீயில் சிக்கி உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீஸôர் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்துக்கு அக்குடும்பத்தின் மருமகன் தஹீர் அலிதான் காரணம் என்று அருகில் இருப்போர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவர், தனது மனைவி ரஹீமா பீவியின் தங்கையை திருமணம் செய்து கொள்வதற்கு அக்குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் வீட்டுக்குத் தீ வைத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். விபத்துக்குப் பிறகு தஹீர் அலி தலைமறைவாகி விட்டதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






