குண்டு வெடிப்பு உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட மாவோயிஸ்ட் மேத்யூஸ் பெட்பகா ஒடிசாவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
காந்தமால் மாவட்டம், மேரகுடி கிராமத்தில் மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது மேத்யூ கைது செய்யப்பட்டதாகப் போலீஸôர் தெரிவித்தனர்.
ராயகடா மாவட்டத்தைச் சேர்ந்த மேத்யூ, மாவோயிஸ்டு இயக்கத்தில் இணைந்து பல்வேறு குற்றச்செயலில் ஈடுபட்டு வந்தார். காந்தமால் மாவட்டத்தில் 2010-ம் ஆண்டு நடைபெற்ற ஆம்புலன்ஸ் குண்டு வெடிப்பில் 5 பேர் உயிரிழந்தனர். 2012-ம் ஆண்டு ஸ்ரீராம்பூர் அருகே நடந்த குண்டு வெடிப்பில் 3 போலீஸôர் உயிரிழந்தனர். இந்த சம்பவங்களில் இவருக்குத் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட மேத்யூவிடம் போலீஸôர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மதிப்பு கூடும் கன்னிக்கு! இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16)

இன்றைய ராசி பலன்கள் (ஜூன் 16 2026) 12 ராசிகளுக்கும்! உதவி கிடைக்கும் மிதுன ராசிக்கு!

ஒரே மாஸ்க்... பலருக்கு சிகிச்சை... அரசு நெஞ்சக மருத்துவமனையில் நோய் பரவும் அவலம்






