அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

காங்கிரஸில் இணைகிறார் ஜெயபிரதா?

மக்களவை உறுப்பினரான ஜெயபிரதா காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News image
Updated On :1 மே 2013, 8:22 pm

மக்களவை உறுப்பினரான ஜெயபிரதா காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர், உத்தரப் பிரதேச மாநிலம், ராம்பூர் மக்களவைத் தொகுதியில் இருந்து எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனது சொந்த மாநிலமான ஆந்திரத்துக்கு திரும்பி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைய ஜெயப்பிரதா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை கடந்த வாரம் இவர் சந்தித்தார். இதைத் தொடர்ந்தே ஜெயபிரதா காங்கிரஸ் கட்சியில் இணைவார் என்று யூகங்கள் கிளம்பியுள்ளன.

"நான் மீண்டும் ஆந்திரத்துக்குத் திரும்ப உள்ளேன். எந்தக் கட்சியில் இணைவேன் என்பதை விரைவில் அறிவிப்பேன்' என்று சமீப காலமாக ஜெயபிரதா கூறி வருகிறார்.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் தனது சொந்த ஊரான ராஜமுந்திரி தொகுதியில் போட்டியிட விரும்புவதாகவும் அவர் சில நாள்களுக்கு முன்பு தெரிவித்தார். ஜெயபிரதாவின் இந்த அறிவிப்பை, ராஜமுந்திரி தொகுதி எம்.பி.யான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வி.அருண்குமார் வரவேற்றுள்ளார்.

திரைப்பட நடிகையான ஜெயப்பிரதா 1990-ம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். மாநிலங்களவை எம்.பி.யாக 1996-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

பின்னர், தெலுங்கு தேசம் கட்சியிலிருந்து விலகி, 2004-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன், சமாஜவாதிக் கட்சியில் இணைந்தார்.

உத்தரப் பிரதேசம், ராம்பூர் தொகுதியிலிருந்து இரு முறை எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார். சமாஜவாதிக் கட்சியிலிருந்து அமர் சிங் வெளியேறியபோது, ஜெயபிரதாவும் வெளியேறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.