இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்ற 18 வயது இந்தியர்

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது இளைஞர்.

Updated On :12 மே 2013, 4:01 am IST

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பில் முதல் இடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது இளைஞர்.

கொல்கத்தாவைச் சேர்ந்த ரிதங்கர் தாஸ் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கடந்த நூறாண்டுகளில் இச்சாதனையை நிகழ்த்திய இளவயது பட்டதாரி ரிதங்கர் தாஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

பயோ-என்ஜினியரிங், கெமிக்கல் பயாலஜி ஆகிய இரு பட்டப்படிப்புகளை இவர் மூன்று ஆண்டுகளில் முடித்துள்ளார். வேதியியல் துறையில் கடந்த 58 ஆண்டுகளில் இச்சாதனை புரியும் முதல் மாணவர் இவர்.

பயோ என்ஜியனிரிங் துறையில் சாதனை புரியும் முதல் மாணவராக இவர் திகழ்கிறார். தனது 13-வது வயதில் ரிதங்கர் விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப் படிப்பில் சேர்ந்தார். அதன்பின்பு எரிசக்தி தொடர்பான ஆய்வுகளில் அவர் கவனம் செலுத்தினார்.

அதே போல் சிறந்த கவிஞராகவும், எழுத்தாளராகவும் ரிதங்கர் தாஸ் திகழ்கிறார்.

இதுதொடர்பாக ரிதங்கர் தாஸ் கூறியது: எனது சாதனையை பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன். அவர்கள் இல்லையென்றால் இச்சாதனையை செய்திருக்க முடியாது என்றார்.

பட்டப்படிப்புக்கு பின்பு ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை பயோமெடிக்கல் என்ஜியரிங் பிரிவில் சேர்ந்து படிப்பை தொடர உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.