முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 22-ஆவது நினைவு தினத்தையொட்டி தில்லி ராஜ்காட் அருகே உள்ள ராஜீவ் காந்தி நினைவிடமான "வீர் பூமி'யில் செவ்வாய்க்கிழமையன்று தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
காலை 7 மணியளவில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசு துணைத் தலைவர் ஹமீது அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவரும், ராஜீவ் காந்தியின் மனைவியுமான சோனியா காந்தி, ராஜீவ் காந்தியின் மகனும் காங்கிரஸ் துணைத் தலைவருமான ராகுல்காந்தி, மகள் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா உள்ளிட்டோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
தில்லி முதல்வர் ஷீலா தீட்சித், வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி, நாடாளுமன்ற விவகாரங்கள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கமல் நாத் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
1991 மே 21-ஆம் தேதி சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்துக்காக சென்ற ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார். அவர் உயிரிழந்த நாளை பயங்கரவாத எதிர்ப்பு தினமாக மத்திய அரசு அனுசரித்து வருகிறது. ராஜீவின் நினைவாக தில்லி ராஜ்காட் அருகே "வீர் பூமி' என்ற பெயரில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குழப்பம் நீங்கும் கடக ராசிக்கு: தினப்பலன்கள்!
தொடரும் ஜனநாயகப் பின்னடைவு!

திமுகவினா் கூப்பன் விநியோக வழக்குப் பதிவு: உயா்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் தகவல்

மதுரை மத்தியம்: தக்க வைப்பாரா பழனிவேல் தியாகராஜன்?
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


